பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

  • மாயவனை அல்லால் இறையேனும் ஏத்தாது

бт6ят път 5о என்றும், திருமால் பக்தியில் அவர் விஞ்சி நிற்பவர். அப்படிப் பட்டவர், சோழ மன்னனைப் பாடியிருக்க மாட்டார் என்பர். ஆனால் திருமங்கையாழ்வார் திருநாறையூர் பதிகத்தில் கோச்செங்கணானைப் புகழ்வதால் பொய்கை யார் ஆழ்வாரே என்பர் பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி. பதினெண்கீழ்க்கணக்கிலும் வழங்காத வட சொற்கள் பல அவரது அந்தாதியில் உள்ளன. யாப் பருங்கல விருத்தியுரையில் பொய்கையார் வாக்காகச் சில பாடல்கள் மேற்கோளாக எடுத்தாளப் பெற்றுள்ளன. பன்னிரு பாட்டியலில் பொய்கையார் பெயரால் சில சூத்திரங்கள் உள்ளன. இந்த இரு நூல்களிலும் குறிக்கப் பெற்றவர் முன் குறித்த மூவரினும் வேறானவர் என்றே கொள்ள இடமுண்டு. எனவே, பொய்கையார் என்னும் பெயருடையார் பலர் பல்வேறு காலத்தில் வாழ்ந்துள்ளமை புலனாம். அவர்களுள் களவழிநாற்பது பாடிய பொய்கை யாரை இடைக்காலத்தில், சீவகசிந்தாமணி, பெருங்கதை ஆசிரியர்களின் கா ல த் தை ஒட்டி வாழ்ந்தவராகக் கொள்ளலாம். நரலாராய்ச்சி போர்க்களத்தின் கொடுமை, யானைப்போர், தீரர் களின் நெஞ்சுரம் முதலியன மிகச் சிறப்பாகப் பேசப் பட்டுள்ளன. இவையெல்லாம் பொருத்தமான உவமை (apt similes) வழி விளக்கப்படுகின்றன. இந்நூல், இடைக் கால ஆங்கிலத் துன்பியல் நூல்களிற் காணப்படும் 50. நாலாயிர திவ்யப் பிரபந்தம்; 94. 51. பெரிய திருமொழி; 6. 52. The Colas; p. 52.