பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361 ஒரு வகையான நகை (Satire) யினை நினைவூட்டுகின்றது என்றும், பிற்காலப் பரணி நூல்களுக்கு வழி காட்டியாய் அமைந்ததென்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுவர். 8 போர்க்கால வருணனை யானை விளைத்த வீரம் களவழிநாற்பதில் பாதிக்கு மேற்பட்ட பாடல்கள் யானை விளைத்த வீரத்தை விளங்கக் குறிப்பிடுகின்றன.' யானையோடு யானை வந்து நெருக்குகின்றன. போர்க் களத்தில் யானைகள் மன்னர் குடைகளை அழித்துப் பாய்கின்றன; அவை புகுந்த இடமெல்லாம் பிணங்கள் விழுகின்றன. சிவந்த உதிரச் சேற்றில் செல்லும் யானைகள் வெகுண்டு தரையை மிதித்தலால் இடங்கள் குழிகின்றன. போர்க்களத்தில் தேரைச் சிதைத்து அத்தேரின் உருளையினை யானைகள் சுமந்தெழுந்தன.57 பகைவரின் குருதி படிந்து கருங்குன்று போன்ற யானைகள் செங்குன்றாக மாறி நிற்கின்றன. கடிய அம்புகள் 53. A History of Tamil Literature; p. 62. ‘‘His work often reminds us of the kind humours which one meets with in the medieval English tragedies. The Parani Literature of later times received its inspiration from this poem.” 54. களவழி நாற்பது; 1, 2, 3, 4, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 19, 21, 22, 23, 25, 27, 30, 31, 35, 37, 38, 48, 41. 55. 25 תכ. 56. 5 * 27. 57. 55 4. 58. 5 * 7