பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 பாய்ந்து யானைகளின் உடலில் ஊடுருவி மலைகளில் குருவிக்கூட்டங்கள் மொய்த்திருப்பதை ஒத்துள்ளன. பல அம்புகள் எவ்வுறுப்புகளிலும் பாய்தலால் யானைகள் தளர்ந்து வருந்துகின்றன. இடைவிடாத அம்புகள் தைக்கப்பெற்ற யானைகள் தீயின் நிறம்" போன்ற உதிரத்தை ஒழுக்குகின்றன. துதிக்கைகள் துண்டிக்கப்பட்டு பவளத்தைச் சொரியும் பையைப்போல ஒளியுடைய சிவந்த உதிரத்தை உமிழ்ந்தன. வெட்டுப்பட்ட யானைகள் இடி விழுந்த பாம்பைப் போலப் புரண்டன. யானை களின் கொம்பின் நடுவே விட்டெறிந்த வேல் அதன் காம்பு குளித்தலால் வேலின் கடைமணி விளங்க யானை களெல்லாம் மூன்று கொம்புகளை உடையவாயின." மார்பில் வேல்கள் அழுந்திப் புண்மிகுந்து யானைகள் தளர்ந்தன; பண்டை வலி இழந்தன. வீரர்களின் வாளால் துண்டிக்கப்பட்ட யானையின் கைகள் நிலத்தில் விழுந்து கிடக்கும் குடைகளின் அருகே கிடக்கும் காட்சி சந்திரனைத் திண்டுகின்ற பாம்பை ஒத்தன. போர் வீரர்களின் படைக்கலங்களால் தாக்குண்டு உதிர இருளில் மூழ்கி எழுந்த யானைகள் செக்கர் வானத்துக் கரிய மேகத்தை ஒத்தன. வீரர்கள் எ றி ந் த வேலினால் யானையின் நெற்றி பிளந்தது.81 வேல்கள் குளித்த யானைகள் வீழ்ந்து கிடந்த காட்சி உருக்கம் நிறைந்த 59. களவழி நாற்பது; 8. 60. 10 ג פ. 61. 5 14 ל. 62. 5 * 13. 63. 5 : 19. 64. 21 כ כ. 65. F 22. 66. 5 : 23. 67. 5 31 ל.