பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 வேலுடன் வாளும் போர்க்களத்தில் வீசிச் சுழன்றன. " குதிரை வீரர்களைக் காலாட்படையினர் வென்று காலைத் துணித்தனர். வெட்டுண்ட கால்கள் நிலத்தில் விழுந்தன. 9 போரில் இருதரப்பினரும் எதிர்த்துப் பொருது படைகளை வீசுதலால் வீழ்ந்த குருதி கார்த்திகை விழாவில் தோன்றும் விளக்கினை ஒத்தன. போர்க்களத்தில் இறந்தவர் களுடைய பிணக்குவியலை உதிரவெள்ளம் இழுத்துச் சென்றது. கழுகுகள் சிறகுகளை விரித்து உதிரத்தோடு பிணங்களைக் .ெ க ா ள் ைள கொண்டு சென்றன. 88 வீரர்கள் வாளால் எறிதலால் பூமியில் கரிய தலைகள் புரளுகின்றன. அறுபட்ட வீரர்களின் நீண்ட கைகளை நரிகள் தமது வாயில் கவ்விச் செல்கின்றன. பருந்தின் சேவல்களும் இதே செயலைச் செய்கின்றன. விழுந்து பட்ட வீரர்களின் குடல்களையும் குறுநரிகள் கவ்விக் கொண்டு இழுக்கின்றன.87 மரங்கள் மிகுந்த சோலையில் காற்று வேகமாக வீச அதற்கு அஞ்சி வேறு வேறாக ஒடும் மயிலின் கூட்டம்போலக் கணவனை இழந்த பெண்கள் நான்கு திசைகளிலும் சிதறி ஓடினர்.98 இவ்வாறு களவழிநாற்பதில் போர்க்களம் மிகக் கொடுமையாக வருணிக்கப்பட்டுள்ளது. 79. களவழி நாற்பது; 33. 80. 9 תג. 81. 3 * 17. 82. 5 : 18. 83. 5 20 ל. 84. 5 : 24. 85. 28 ל ג. 86. 3 * 26. 87. - i. 34. 88. 55 29.