பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367. நிகழ்ந்தது என்றும் அப்போரில் சோழன் வெற்றிபெற்றான் என்றும் தெரியவருகின்றன. இக்கழுமலம் கொங்கு நாட்டிலோ கொச்சி நாட்டிலோ இன்றிருத்தல் வேண்டு மென்றும், கொச்சிநாட்டில் கணையனுார் என்ற பெயரால் வழங்கும் ஒரு பேரூர் இன்று உளது என்றும் கூறுவர். மேலும் கழுமலம், குட்ட நாட்டில் வாழ்ந்தவனும் சேர வேந்தற்குத் தானைத்தலைவனுமாக விளங்கியவனிடம் இருந்தது. குடவாயிற் கீரத்தனார் அகநானூற்றுப் பாட லொன்றில் 120 கழுமலம் கணையன் ஆட்சியில் இருந்தது என்று சுட்டுகின்றார். இக் கழுமலம் சேரர்க்குரியதென்பது பிறிதோர் அகநானூற்றுப் பாட்டால்' தெரியவருகிறது. திருவிதாங்கூர் கல்வெட்டுகள் இக் கழுமலப் போரில் கலந்து பொருத நன்னனேற்றை முதலியோர்க்குரிய ஊர்ப் பெயர் களைக் குட்டநாட்டுக் குரியவாகக் குறிக்கின்றன. இதனால் இக்கழுமலம் குட்டநாட்டின்கண் விளங்கிய ஊர் என்றும் அதுவே கணையனுக்குப்பின் கணையனுார் எனப் பெயர் பெற்றதென்றும் பேராசிரியர் ஒளவை. துரைசாமிப் பிள்ளை அவர்கள் குறிப்பிடுவர். நாற்படை யானைப்படை பற்றிய குறிப்பு இருபத்தைந்து பாடல் களிலும் 28, குதிரைப் படை பற்றிய குறிப்பு இரண்டு பாடல் களிலும்124, தேர்ப்படை பற்றிய கு றி ப் பு ஒரு 120. அகநானூறு; 44. 121. * 5 : ; 270. 122. T. A. S. Vol. III luă. 10, 20. 123. களவழி நாற்பது; 1, 2, 3, 4, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 19, 21, 22, 23, 25, 27, 30, 31, 35, 37, 38, 40, 41. 124. 15 16, 36.