பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 இயம்வரம்பன் நெடுஞ்சேரலாதனின் வெற்றியினைக் குமட்டுர்க் கண்ணனார் பாடியுள்ளார். இக்குறிப்பிடத் தக்க கடம்பனின் வெற்றி, பின்வரும் பாடற்பகுதிகளில் சுட்டப் பெறுகின்றது. பலர்மொசிங் தோங்கிய திரள்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் நாாறி நறவின் ஆர மார்பிற் போரடு தானைச் சேர லாத. -இரண்டாம் பத்து; 1: 12-16. துளங்குபிசி ருடைய மாக்கடல் நீக்கிக் கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை ஆடுநர் பெயர்த்துவந் தரும்பலி தூஉய்க் கடிப்புக் கண்ணுறுஉங் தொடித்தோள் இயவர். -இரண்டாம் பத்து; 7: 4.7. இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேர லாதன். -இரண்டாம் பத்து; 10: 2-5. வரலாற்றுக் குறிப்புகளைத் தம் பாடவில் பெரும் பான்மையும் மறவாது குறிப்பிடும் மாமூலனார் என்னும் சங்கச் சான்றோரும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடம்பறுத்த செய்தியினைப் பின்வருமாறு குறிப்பிட் டுள்ளார்: வலம்படு முரசின் சேரலாதன் முந்நீர் ஒட்டிக் கடம்பறுத்து. -அகம்; 127: 3.4, சால்பெருந் தானைச் சேர லாதன் மால்கடல் ஒட்டிக் கடம்பறுத் தியற்றிய பண்ணமை முரசின் கண்ணதிர்ந் தன்ன -அகம், 347: 3.5.