பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.71 வீட்டினை அலங்கரிக்கும் செய்தி ஒரு பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது. கே. o உவமைகள் நெஞ்சை அள்ளும் நீர்மையினவாய்க் களவழி நாற் பதின் ஒவ்வொரு பாடலும் ஒர் உவமையினைக் கொண்டு திகழ்கின்றது. சான்றாகச் சில காண்போம்: போர்க்களத்தில் பகைவரின் உதிரத்தில் படிந்துண்ட காகங்கள் தம்முடைய இயல்பான கருநிறத்தை இழந்து செம்போத்துப் பறவையின் புறத்தை உடையவாகிச் சிச்சிலிக் குருவி போன்ற வாயை உடையவாயின. ே துதிக்கை வெட்டப்பட்டு நிலத்தில் புரளும் யானைகள் இடியால் தாக்குண்ட பாம்பைப் போலப் புரண்டன.' கருங்குன்று போன்ற யானை சிவந்த ரத்தத்தில் படிவதால் செங்குன்றை நிகர்த்தன. 158 போர்க்களத்தில் பொய்கைக் கரை உடைந்து நீர்பரந்த இடமெல்லாம் நெய்தல் பூக்களின் நடுவே வாளை மீன்கள் பிறழ்தல்போல வேலுடன் வாளும் பிறழ்ந்தன. குதிரைமேல் இருந்த வீரர்களைக் கீழ்நின்ற காலாட்கள் சென்று துணித்த அளவில் காலுக்கு இட்ட செருப்போடு அறுபட்ட வீரக்கழலணிந்த கால்கள் பெரிய கடலுள் இரையில்லாத சுறாமீன்கள் பிறழ்வதை ஒத்தன.' போர்வீரர்கள் துணித்த கைகளைத் தம் வாயில் கவ்விக் கொண்டு மேலெழுந்த சிவந்த பருந்தின் சேவல்கள் பாம்பைக் கவ்விக்கொண்டு வானில் பறந்து செல்லும் 155. களவழி நாற்பது; 17. 156. E. J. " 5. 157. 13 נפ. 158. 7 גוג. 159. 33 פת. 160. 5 : 9.