பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 கருடனைப்போல் தோன்றின.161 போரில் மலைகள் கலங்கப் பாயும் மலைகளைப்போல யானைகள் பாய்வதால் அவற்றின்மீது கட்டப்பட்டுள்ள கொடிகள் மேலெழுந்து வானத்தைத் துடைப்பதை ஒத்து விளங்கின. போரில் இருதிறத்தினரும் எதிர்த்துப் பொருதுப் படைக்கலங்களை வீசுதலால் கொட்டிய குருதி கார்த்திகை விழாவில் தோன்றும் விளக்கினை ஒத்தன. . இவ்வாறு பல பாடல்கள் அமைந்து இந்நூலானது நல்ல உவமை நயத்துடன் சொற்செறிவும் பொருட் செறிவும் கொண்டு துலங்குகின்றன. 161. களவழி நாற்பது; 26. 162. 13 25. 163. 32 so 17.