பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியங்கள் காப்பியம் என்பது ஒரு நிகழ்ச்சியையோ அல்லது பல நிகழ்ச்சிகளையோ உள்ளடக்கிய நீண்டதொரு கதையாகும். இது பெரும்பாலும் பேரரசர் மற்றும் சிற்றரசர்களின் வீர தீரச் செயல்களை எடுத்துக் கூறுவதாக அமையும். மேலும் காப்பியமாவது சொல்லப்பட்டிருக்கின்ற முறையாலும், மொழி நடைச்சிறப்பினாலும் ஒரே சமயத்தில் படிப்பவர் களுடைய கவனத்தை ஈர்க்கக் கூடியது. காப்பியம் ஏதேனும் ஒரு நீதியைப் புகட்டுவதாக அமையும்; அது அவ்வாறு அமையவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காப்பிய முடிவு எதிர்பாராத ஒரு துன்ப அல்லது இன்ப நிகழ்ச்சியோடு முடியலாம். உலகில் தோன்றியுள்ள பெரும்பான்மையான காப்பியங்கள் மரபுவழிப்பட்ட இக் காப்பிய இலக்கணத்திற்கு ஏற்றதாக இருக்கின்ற நிலையில் சிலப்பதிகாரக் காப்பியம் மரபு வழிக் காப்பிய இலக்கணத் திலிருந்து சிற்சில மாறுதல்கள் பெற்று இலங்குகின்றது. அது நீண்ட காப்பியமன்று; வர்ஜிலின் ஏனியட் காப்பியத் தில் பாதியளவே உடையது. பேரரசர் அல்லது சிற்றரசர் வாழ்க்கை குறித்த காப்பியமன்று; பொதுமக்களுள் ஒரு வரது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நீண்ட கதைப் போக்கில் கூறுகின்றது. இந்நூல் வலிமை வாய்ந்த அரசனின் தீரச்செயல்களைக் கூறவில்லை. சிலப்பதிகாரம் மனிதக் குறைபாடுகளைக் கொண்ட அதே நேரத்தில் சிறந்த பண்பாடும் நல்ல குணங்களும் உடைய வசதி நிறைந்த இளம் வாணிகன் ஒருவனின் வாழ்க்கையில் நேர்ந்த ஊழ் வினைப் பயனை வலியுறுத்துகின்றது. அடக்கமும், அழகும், நாணமும் உடைய பன்னிரண்டு வயதுப் பெண்ணான கண்ணகி, கோவலனுக்கு மனைவியாகின்றாள்; சிறந்த