பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 அழகும் நல்ல குணமும் உடைய நாட்டிய மங்கையான மாதவி, காப்பியத்தில் அறிமுகமாகின்ற நிலையிலேயே கோவலனைத் தன்பால் ஈர்த்து விடுகின்றாள். காப்பியப் போக்கிலே தலைமை மாந்தர் என்னும் நிலை கோவலனிட மிருந்து கண்ணகியைச் சென்று அடைகின்றது. கண்ணகி கற்புத் தெய்வமாக உயர்த்தப்பெறுகின்றாள்; அமைதி வாய்ந்த அவள் தனது கணவன் கொலை செய்யப்பட்ட தற்கு நீதி வேண்டிப் பாண்டியன் நெடுஞ்செழியன் அவை யிலே வழக்காடும் பொழுதும், மதுரையைத் தீக்கிரையாக் கும் பொழுதும் இதுவரை சந்தித்து இராத கதைத் தலைவி யாக உயர்கின்றாள். காப்பிய முடிவிலே கண்ணகி பெண் களுக்கிடையே கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வ மாக ஒளிர்கின்றாள். இந்நிலையில் இக்காப்பிய ஆசிரிய ரான இளங்கோவடிகளின் தமையனான சேரன் செங்குட்டுவன் கங்கைக்கரையில் வடதிசை மன்னர்களோடு பொருது சிறப்புப் பெறுகின்றான். ஆனால் அச்சிறப் பினைக் கண்ணகியின் தியாகத்திற்கும் பத்தினிக்கோட்டம் அமைப்பதற்கும் காணிக்கை ஆக்குகின்றான். இதனால் சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப் பெறு வதைக் காண்கின்றோம். சிலப்பதிகாரமென்ற இக்காப்பியம் மற்ற இலக்கியம் போன்றதன்று. இக்காப்பியம் நம் நினைவில் பதியும் வண்ணம் இனிய பாடல்களையும் நாட்டிய மங்கை ஒருத்தி யின் கலை நயமிக்க நாட்டியத்தையும், கிராமப்புற மக்களின் கூத்தையும் கொண்டு திகழ்கின்றது. தமிழுக்கே உரித்தான இயல், இசை, நாடகம் என்ற மூன்று கூறு களையும் இக்காப்பியம் பெற்றிருப்பதால் இதனை முத் தமிழ்க் காப்பியம்' என அழைப்பர். இவ்வியல் கண்ணகியின் அவல வாழ்க்கை என்னும் நாடகத்தில் சேரநாடும், சேர அரசரும், சேரநாட்டு மக்களும் பங்கேற்ற முறைமையினை வலியுறுத்துகின்றது.