பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி ! 1. சிலப்பதிகாரம் காட்டும் அரசியல் வரலாறு சிலப்பதிகார காலத்தில் தமிழ்நாட்டைச் சேர சோழ பாண்டியர் என்ற முப்பெரு வேந்தர்கள் ஆண்டுவந்தனர். சேர நாட்டின் தலைநகர் வஞ்சி. சேரன் செங்குட்டுவன் அங்கிருந்து சேரநாட்டினை ஆண்டு வந்தான். சோழர் தலைநகரம் புகார் ஆகும். கரிகால் வளவனுக்குப் பின்னர் மாவண்கிள்ளி அல்லது கிள்ளிவள்வன் ஆண்டு வந்தான். மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆண்டு வந்தான். பாண்டியர்களது கடற்கரைப் பட்டினமான கொற்கையில் நெடுஞ்செழியனின் இளவல் வெற்றிவேற்செழியன் இளவர சனாக இருந்து வந்தான். தமிழ்நாட்டை அடுத்த ஆந்திர நாட்டில் சதகர்ணிகள் எனப்படும் நூற்றுவர் கன்னர் ஆண்டு வந்தனர். வடநாட்டில் பாலகுமரன் மக்களாகிய கனக விசயர் ஆண்டு வந்தனர். இலங்கைத் தீவினைக் கயவாகு மன்னன் ஆண்டு வந்தான். சேர சோழ பாண்டியர்களுடைய இலச்சினை முறையே வில் புலி கயல் ஆகியனவாம். பனையும் ஆத்தியும் வேம்பும் முறையே அவர்களுக்குரிய மாலைகளாகும். சிலப்பதிகார காலத்தே மூவேந்தருள் சேரன் செங்குட்டுவனே படை வலிமையால் மேம்பட்டு விளங்கினான். அவனுடைய ஆணை நாற்புறமும் சென்றது. சோழர் முடி குறித்து உரிமை பாராட்டி ஒன்பதின்மர் கலகம் செய்தபோது அவர்களை ஒடுக்கிச் சோழர் சிம்மாசனத்துக்கு உரியவனா