பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 கிய அவன் மைத்துனன் கிள்ளிவளவனுக்கே வழங்கினான்." மேலும் பல வெற்றிகளும் செங்குட்டுவன் பெற்றிருந்தான். இவ்வெற்றிகள் சோழ பாண்டியரினும் தனித்ததோர் தலைமையினை அவனுக்கு நல்கியது. எனவே தான் அவன் வடநாட்டுச் செலவுச் செய்தியை அவன் தானைத்தலைவ னாம் வில்லவன் கோதை, வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்டலை யேற்ற வரைக’ என்று கூறுவதிலிருந்தும் இவ்வுண்மையினை நாம் அறியலாம். தந்தைக்குப் பின் அவனுடைய மூத்த மகன் முடிசூடும் மக்கள்தாயக் கொள்கையே சிலப்பதிகார காலத்தில் நிலை பெற்றிருந்தது எனலாம். மருமக்கள் தாயக் கொள்கை அந்நாளில் சேரர் பரம்பரையில் நிலவியது என்போர் கூற்றுப் பொருந்தா உரை என்பது சிலப்பதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது. இளங்கோவடிகளே இந்துணுகிய அரசியல் உண்மையினைச் சிலப்பதிகாரத்தின் இறுதியில் இடம்பெற்றிருக்கும் வாழ்த்துக்காதையில் வடித்துக் காட்டு கின்றார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இரு மருங்கே ஒருநாள் அரசமன்றத்தில் மூத்தமகன் செங்குட்டு வனும் இளையமகன் இளங்கோவடிகளும் வீற்றிருந்தனர். அதுபோது அங்கு வந்த நிமித்திகன் ஒருவன் 'இமயவரம்ப னுக்குப் பின்னர் அரியணை ஏறும் அமைவும் தகுதியும் பொருந்தியவன் இளங்கோவே' என்று மொழிந்தனன். இதனைக் கேட்ட இளங்கோ சினந்து மூத்தோனிருக்க இளையோன் முடிபுனைவது முறையன்று என்று கூறிச் 1. சிலப்பதிகாரம்; நீர்ப்பை டக்காதை : 117-123. 2. 5 : * * : 170-172. 3. M. Srinivasa Iyengar, Tamil Studies, pp. 272-273