பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379 செங்குட்டுவனின் துன்பம் தீர அன்றே துறவு மேற்கொண் டார். இச்செய்தியினைத் தேவந்தி மேல் திகழ்ந்து தோன் றிய பத்தினிக் கடவுள் பாங்குடன் மொழியக் காண்கி றோம்.4 அரசன் தலைநகரத்திலிருந்து ஆட்சி நடத்தியபோது அவனுக்குப்பின் பட்டம்பெறும் உரிமையுடைய மகன் அல்லது இளவல் பிறிதொரு நகரில் இருந்து இளவரசுப் பட்டம் பூண்டு ஆட்சியில் பழகி வந்தான். இதனை நெடுஞ். செழியன் இறப்பிற்குப் பின் அவனுடைய இளவல் கொற்கை. யிலிருந்த வெற்றிவேற்செழியன் பாண்டிய நாட்டின் முடிபுனைந்து நன்மாறன் என்னும் மறுபெயர் தரித்துக் கொண்டதினின்றும் அறியலாம்." மன்னவனே நாட்டின் தலைவன்; நாற்படைகளுக்கும் தலைவன். கோன் ஆட்சி நிலவிய அந்நாளில் எல்லையில் லாத அதிகாரம் அவனிடம் குவிந்து கிடந்தது. மக்கள் அவனை மாண்புற மதித்தனர். ஏழ்பிறப்பிலும் அவன் தாழ். நிழலில் வாழ விழைந்தனர். நாட்டில் பாடும் பாடல்கள் மன்னன் மக்களிடம் பெற்ற செல்வாக்கினை உணர்த்து கின்றன. மன்னன் மக்கள் மனம் மகிழச் செங்கோலோச்ச வேண்டும் என விரும்பினான். மழைவளம் குறைவுபட்டால், உயிர்கள் நோயால் மடிந்தால் மன்னனையே மக்கள் பழிப்பர் என்று நினைந்து செங்குட்டுவன் அரசகுடியில் பிறத்தல் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலே ஆகும் என Old Toshg, Quomo, Gopāoivouri Uneasy lies the head that wears the Crown என்று குறிப்பிட்டுள்ளதோடு ஒப்புநோக். கத்தக்கதாகும். கொடுங்கோல் அரசனுக்கு இளங்கோவடி கள் கொடிய வேனிலை உவமையாகக் கூறியுள்ளது சிந்திக் கத் தக்கது.ே கொடுங்கோல் மன்னனின் ஆட்சியை மக்கள் வெறுத்தார்கள் என்பதனைக் கோவலன், கண்ணகி, - 4. சிலப்பதிகாரம், வரந்தரு காதை : 170.184. 5. 5 : ; நீர்ப்படைக் காதை . 124.138. 6. גל ; காட்சிக் காதை : 100-104.