பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 கவுந்தியடிகள் மூவரும் நிலவொளியில் மதுரைக்கு வழி நடப்பதாக முடிவு செய்து, சூரியன் மறையும்பொழுதை எதிர்பார்த்திருந்ததனோடு ஒப்பிட்டுள்ளமையை நோக்கி அறிகிறோம். வேனிற்காலத்தில் நிலம் வளமற்ற செயல் கொடியவரின் பேச்சைக் கேட்டுக் கொற்றவன் முறை கொடிய செயலுக்கு ஒப்பு என மாங்காட்டு முறையோன் .கூறுவதனாலும் அறியலாம். மக்கள் கடவுளோடு மன்னனை ஒப்ப மதித்தார்கள் என்பது நன்கு புலனா கின்றது. கோயில் என்ற சொல் இறைவன் உறையும் திருக்கோயிலையும் அரசன் உறையும் அரண்மனையையும் ஒருங்கே உணர்த்த வல்லதாகும். இறைவன் என்ற சொல் கடவுளையும் மன்னனையும் ஒப்பக் குறிப்பதோர் உயரிய சொல்லாம். அரசன் தனக்கு ஆட்சியில் துணை புரிவதற்கு ஐம்பெருங் குழு," எண்பேராயம்: 0 என இருபெருங் குழுக்களைப் பெற்றிருந்தான். அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், துரதுவர், சாரணர் என்ற ஐவரும் ஐம்பெருங்குழுவினர் ஆவர். கரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், நளிபடைத்தலைவர், யானை வீரர், இவுளி மறவர் என்னும் எண்மரும் எண் 7. சிலப்பதிகாரம்; புறஞ்சேரியிறுத்த காதை : 15.16. 8. 5 : காடுகாண் காதை : 60.66. 9. ; : இந்திரவிழவூரெடுத்த காதை:157; மற்றும் கால்கோட் காதை : 38. 10. 2 3 இந்திரவிழவூரெடுத்த காதை:157; மற்றும் கால்கோட்காதை : 38. 11. ஐம்பெருங்குழு: அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தவாத்தொழிற்றுதுவர், சாரண ரென்றிவர், பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே எனுமிவர். - அடியார்க்கு நல்லார் உரை (சிலம்பு: இந்திர விழவூரெடுத்த காதை : 157-160)