பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

381 பேராயத்தினராவர். இவர்களேயன்றி கருமவினைஞர், கணக்கியல் வினைஞர், தரும வினைஞர், தந்திர வினைஞர், பெருங்கவி முதலான அரசியல் அதிகாரிகளும் ஆட்சித் துறையில் அரசனுக்குத் துணை புரிந்தனர். அரசன் ஆட்சி அலுவலை இக்குழுவினரைக் கலந்தே ஆற்றி வந்தான். அமைச்சர் முதலான அரச அலுவலர் மந்திரச்சுற்றம் என வழங்கப்பெற்றனர். * செங்குட்டுவன் அ ைம ச் ச ன் அழும்பில்வேள், திருவள்ளுவர் குறிப்பிடுவது போன்று அமைச்சுக்குரிய அறிவு நிரம்பப் பெற்றவன். கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு. * அழும்பில்வேள்' நுட்பமான அறிவுடன் நாட்டு நிலை. யையும் நன்கு அறிந்தவன். எனவேதான் செங்குட்டுவன் வடநாட்டுச் செலவினை வஞ்சிமாநகரில் பறையறைந்: தாலே போதும், ஒற்றர் வழி பகைவர் அறிந்துகொள்வர் எனக் கூறினான். இதனால் பிறநாடுகளில் மறைந்து வாழ்ந்து அவ்வப்போது தம் அரசனுக்குச் செய்திகளை அனுப்புவது ஒற்றர்தம் வேலை என்பது புலப்படுகிறது. வேடவரசரை வென்றே திரும்புவேன்' என்று தனது Hom mom 12. எண்பேராயம் :-:கரணத்தியலவர், கருமகாரர், கனகச்சுற்றங் கடைகாப்பாளர், நகரமாந்தர், நளிபடைத்தலைவர், யானை வீரரிவுளி மறவர், இனையரெண்பே ராயமென்ப' எனுமிவர். -அடியார்க்கு நல்லார் உரை(சிலம்பு; 5:157-160). 13. சிலம்பு; கொலைக்களக் காதை ; 137. 14. திருக்குறள்; அமைச்சு : 1. 15. சிலம்பு ; காட்சிக்காதை : 177. ந. மு. வேங்கட சாமி நாட்டார் உரை. - * 16. சிலம்பு; காட்சிக்காதை : 173.177.