பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 அரசவையில் செங்குட்டுவன் வஞ்சினம் புகன்றபோது, அவனது சினத்தைத் தணித்தவன் புரோகிதனே ஆவான்.' அவன் ஆசான் எனவும் அழைக்கப்பட்டான். செங்குட்டு வனின் காலாட்படைகளுக்குத் தலைமை தாங்கி வட புலத்தின் மேல் படை நடத்தி ஆரிய அரசரை வென்று வாகை சூடியவன் வில்லவன்கோதை எனப்படுபவன். துரது வர் எனப்படுவோர் தம் அரசர் இட்ட கட்டளைகளைப் பிறநாட்டு அரசர்க்குக் கொண்டு சென்றனர். போர்க் காலங்களில் அரசனுடன் இருந்து அவனிடும் கட்டளைகளை நிறைவேற்றி வந்தனர். செங்குட்டுவன் துரதுவர்களுக்குத் தலைமை தாங்கியவன் சஞ்சயன் எனப்படுபவன். ! ? இவன் செங்குட்டுவனிடமிருந்து நூற்றுவர் கன்னரிடம் சென்று அவர் துணையினைப் பெற்று செங்குட்டுவன் படைகள் கங்கையாற்றைக் கடத்தற்குரிய மரக்கலங்களைச் சமைக்கச் செய்தான். துTதுவர் சட்டையும் தலைப் பாகையும் அணிந்திருந்தனர். இதனால் அவர்கள் கஞ்சுக முதல்வர் எனவும் அழைக்கப்பட்டனர். பாண்டியன் கொடுத்த திறைப்பொருள்களைத் தான் பெற்றுக் கொண்டமைக்கு அடையாளமாகத் தன் முத்திரை .யிட்ட கடிதத்தை இக் கஞ்சுக முதல்வர் மூலமே செங்குட்டுவன் அனுப்பினான். அரசனுக்குக் கண் போன்ற ஒற்றர் சாரணர் எனச் சிலப்பதிகாரத்தில் வழங்கப் படுகின்றனர். இவர்கள் பிறநாட்டில் கலந்துரைந்து தம் அரசனுக்கு இன்றியமையாத அரசியல் செய்திகளை அனுப்பி வைப்பர்.22 - == 17. சிலம்பு கால்கோட் காதை 19:24, 18. 5 : > 5. . 19. 2 5 145-155 : גל. 20. H. H. 138 : גג உரை சட்டை யிட்ட பிரதானர்' 21. 166-175 : ל 5 ג כ. 22. גם காட்சிக் காதை : 175.176.