பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383 அரசனுக்குரிய வருவாய்த் து ைற க ள ா க த் திருவள்ளுவர், உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்?? என்று குறிப்பிடுவர். செங்குட்டுவன் பாண்டிய மன்னரிட மிருந்து திறை பெற்றமை முன்பே கூறப்பட்டது. குன்றக் குரவர்கள் யானை வெண்கோடு, அகிலின் குப்பை, மான் மயிராகிய வெண்சாமரை, தேன்குடங்கள், சந்தனக்குறை, சிந்துாரக்கட்டி, அஞ்சனத்திரள், அணியரிதாரம், ஏலவல்லி, இருங்கறிவல்லி, கூவைக்கிழங்கினிறு, கொழுங்கொடிக் கவலை, தெங்கின்பழம், தேமாங்கனி, பச்சிலைமாலை, பலவின் பழங்கள், வெள்ளுள்ளி, கரும்பு, பூங்கொடி, கமுகின் செழுங்குலைத்தார், பெருங்குலைவாழையின் இருங் கனித்தார், ஆளியின் குட்டி, அரியின் குருளை, புலியின் குட்டி, யானைக்கன்று, குரங்குக்குட்டி, வளைந்த அடிகளை யுடைய பிள்ளைக்கரடி, மலையிற் பாய்ந்து விளையாடும் வருடைமான், மடமான் மறி, கத்துTரிக் குட்டி, மாசறு நகுலம், பீலிமஞ்ஞை, நாவியின்பிள்ளை, கானக்கோழி, தேன்மொழிக்கிள்ளை முதலிய மலைபடு பொருள்களைச் செங்குட்டுவன் அடிகளில் வைத்து வணங்கி இறை செலுத்தி யமையைக் குன்றக் குரவையால் அறியலாம்.24 தம் நாட்டி லிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் பொருள்களுக்கும் வெளிநாட்டிலிருந்து உள்நாட்டில் இறக்குமதியாகும் பொருள்களுக்கும் சுங்கவரி விதிக்கப்பட்டது. அரசருடைய பிறந்த நாளில் பகையரசர் சிறைவீடு செய்யப்பட்டனர். க செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்து விழாக் கொண்டாடிய நாளில் மக்கள் வரி தவிர்க்க ஆணை பிறப் பித்தான்." பிற்காலத்தில் முதற்குலோத்துங்க சோழன் 23. திருக்குறள்; பொருள் செயல் வகை 5. 24. சிலப்பதிகாரம்; காட்சிக் காதை : 37.54. 25. H. : நடுகற் காதை : 195.196. 26. * I # 7. . 203-204.