பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 மக்கள் சுங்க வரியை நீக்கி, சுங்கம் தவிர்த்த சோழன் எனப் பாராட்டப் பெற்றமை பிற்காலச் சோழர் வரலாற்றால் புலனாகும். அரசன் தவறு செய்யாத ஒருவனைச் சிறையில் அடைத்தால் காளிகோயில் கதவும் மூடிக்கொள்ளும் என்பது பாண்டிய அரசனுடைய ஏவலாளர் இலர் அரசனுக்குத் தெரியாமல் வார்த்திகன் என்பானைச் சிறை யிலடைத்தபோது நேரிட்டதை அறியலாம். உண்மை உணர்ந்த பாண்டியன் அறியா மக்களால் தன் அரசநீதி நெகிழ்ந்ததைப் பொறுத்தருளுமாறு வார்த்திகனிடம் வேண்டினான். உடனே திறவாதிருந்த காளிகோயிற் கதவு திறந்தது. அதுகண்ட அரசன் சிறையிலிருந்தோரை விடுதலை செய்தான். மக்கள் நலமே மன்னனின் கருத்தாக இருந்தது. மக்கள் நலனுக்காக அவன் பல நற்பணிகளைப் புரிந்தான். பூம்புகார் நகரில் நான்கு திசைகளிலும் காவல் தெய்வம் அமைந்து அந்நகரைக் காத்தது. இருவகை மன்றங்கள் அவ்வூரில் இலங்கின. இருவகை மன்றங்களில் ஒன்றான இலஞ்சி மன்றத்தில் ஒரு பொய்கை இருந்தது. அப். பொய்கையில் கூனர், தொழுநோயர் முதலாயினோர் மூழ்கின அளவிலே தம் பழுதுபட்ட தோற்றம் நீங்கி நல்யாக்கையினைப் பெற்றனர். அம்மடுவை வலம் வந்து மூழ்கி நலம் பெற்றனர், நன்மக்கள் பலர். இலஞ்சி மன்றத்தை அடுத்து இன்னொரு மண்டபம் இருந்தது. அங்கு ஒளியுமிழும் கல் ஒன்று நடப்பட்டிருந்தது. வஞ்சனை யால் மருந்துாட்டப்பட்டுப் பித்தேறினவரும், நஞ்சை உண்டு நடுக்கம் எய்தினவரும், கொடிய விடமுடைய பாம்பால் கடிக்கப்பட்டோரும் அத்துணை வலம் வந்தால் விடம் நீங்கித் துன்பத்தினின்றும் விடுபடுவர் என்ற நம்பிக்கை நி ல வி யது. இம்மன்றங்க ளெல்லாம் கடவுட்டன்மை உடையன போலக் கூறப்பட்டாலும், மக்கள் உற்ற நோய்களை நீக்க ஆங்காங்கே தற்காலத்து மருத்துவ நிலையங்கள் இருத்தல் போல, அக்காலத்து மன்ன்னால்