பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385 மக்களுக்கென நிறுவப்பட்ட மருத்துவ மன்றங்கள்" எனக் கொள்ளலே சால்புடையதாகும். அரசர் நீதிமுறையுடன் அரசாண்டனர். பாண்டிய நாட்டில் கரடி கொடும் புற்றைத் தோண்டாது. வேங்கைப் புலி மான் கூட்டத்தை மடிவிக்காது. பாம்பும் சூரும் முதலையும் இடியும் சார்ந்தவர்க்குத் துன்பம் விளை விக்கமாட்டா. ஏனெனில் தென்னவன் நாட்டில் செங்கோன்மை திகழ்ந்து தோன்றுகின்றது: என்று பாண்டியனின் அரசியலைக் கோவலன் பாங்குறப் புகழ்ந்து பேசினான். நாட்டு மக்களுக்கு நீதி வழங்கும் மன்றம் அறங்கூர் அவையம்' எனப்பட்டது. அம்மன்ற நிகழ்ச்சி களில் ஐம்பெருங் குழுவினர் பெரும்பங்கு வகிப்பர். மக்கள் நேரில் சென்று அரசனிடம் நீதி வேண்டி நேரே நிற்பதும் உண்டு. கண்ணகி வழக்குரை காதையில் அரசனிடம் நீதி வேண்டி நேரே சென்றாள். கள்வனைக் கொல்லுதல் கடுங்கோலன்று என்று பாண்டியன் மொழிந்தான். இறுதியில் தம்மீதே குற்றம், நீதி தவறிவிட்டோம் என உணர்ந்த பாண்டியன், பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் எனக் கூறி அரியணை மீதிருந்து தரையில் வீழ்ந்து உயிர் துறந்தான். மாறுவேடம் தாங்கி மக்கள் நலனை அறியச் சென்ற பாண்டியன் ஒருவன் பின்னால் பொற்கைப் பாண்டியன் எனத் தன் நீதி நிலைத்த ஆட்சியால் அறியப் படுகின்றான்.49 பூம்புகார் நகரில் சதுக்கப் பூதங்களில் ஒன்று தவவேடம் புனைந்து அதற்குரிய ஒழுக்கங்களை மேற்கொள்ளாது --ുങ്ക 27. சிலப்பதிகாரம்; புறஞ்சேரியிறுத்த காதை : 5.10. 28. * > * வழக்குரை காதை : 73.78. 29. ,, கட்டுரை காதை : 42.53. சே. செ. இ.25