பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$86 உலகை ஏமாற்றித் திரியும் போலித் துறவிகள், செங்கோல் அரசனுக்கு எதிராகச் சதி செய்யும்;அமைச்சர், பிறன்மனை நயக்கும் பேதையர், பொய்ச்சான்று கூறுவோர், புறம் கூறுவோர் முதலியவர்களைப் பெருங்கயிற்றால் கட்டி நாலு காத துாரம் கேட்கும்படிப் பேரொலி எழுப்பித் துன்புறுத்தினதாகச் சி ல ப் ப தி கா ர த் தி ல் சொல்லப் பட்டுள்ளது. புகார் நகரத்துப் ԼI T 6Ծ) Յ)I மன்றத்தி லிருந்த பாவை, அரசனுடைய செங்கோல் தவறினாலும் அறங்கூறும் அவையோர் நடுவுநிலைமை நீங்கி ஒருபாற் கோடி நீதி கூறினாலும் அந்நிகழ்ச்சியை நாவால் கூறாது கண்ணால் நீருகுத்துக் கூறியது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. யானை, குதிரை, தேர், காலாட்படை என்னும் நால்வகைப் படைகளும் அக்கால அரசனிடம் இருந்தன.80 செங்குட்டுவன் வடநாடு சென்றபொழுது அவனுடன் யானை நூறும், குதிரை பதினாயிரமும், பண்டங்கள் ஏற்றிய வண்டி இருபதினாயிரமும் நாடகக் கணிகையர் நூற்று இருவரும், நகைச்சுவை வழங்குவோர் நூற்றுவரும், வாத்தியம் வாசிப்போர் இருநூற்றெண்மரும், அரச அதிகாரிகள் பதினாயிரமரும் உடன்சென்றதாக இளங்கோ வடிகள் குறிப்பிட்டுள்ளார். இப்படைகள் செல்லும் பொழுது மலைகளின் முதுகுகள் நெளிவதுபோல இருந்தன என்றும், படை நடை பூமியில் அழுந்திச் சென்று சுவடிட்டன என்றும் இளங்கோவடிகள் மேலும் குறிப்பிடுவர்.82 செங்குட்டுவனிடம் பெரியதொரு கடற்படை இருந்த தென்றும் அதுகொண்டு அவன் கடற்குறும்பு செய்த கடம்பர்களைப் பொருது வென்று அடக்கினான் என்றும் சிலப்பதிகாரம் செப்புகின்றது.8 30. சிலப்பதிகாரம்; கால்கோட் காதை : 86-87. 31. כ כ Bio o 128-138. 32. - 5 : - E. :) : 80-82. .187 : காட்சிக் காதை وو : ' ' .33