பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387 தம் ஆணையை ஏற்றுக்கொள்ளாத அரசர்களை அல்லது தம் வீரத்தை இழித்தும் பழித்தும் பேசிய மன்னர் களை அடக்க மன்னன் படையெடுத்துச் சென்றான்." நல்ல முழுத்தத்தினைக் கணி எடுத்து உரைப்பான்." கணி குறித்த நல்ல பொழுதில் அரசன் போருக்குப் புறப்பட முடியவில்லையானால் தன் வெண்கொற்றக் குடையையும் வாளையும் யானை மீதேற்றி அத்திசை நோக்கிப் புறவீடு செய்தல் அக்கால மரபென்பதைக் கரிகால்வளவனும்" சேரன் செங்குட்டுவனும்87 தங்கள் வெண்கொற்றக் குடையினையும் வாளினையும் நல்ல அமையம் பார்த்து வடதிசை நோக்கிவிட்ட செயல்களால் அறியலாம். இதனை நாட்கோள்’ என்றும், குடை மங்கலம்' என்றும் இலக்கணம் கூறும். போருக்குப் புறப்படு முன்பு படை களுக்கு அரசன் பெருஞ்சோறு வழங்குவான்." இது பெருஞ்சோற்றுநிலை எனப்படும். பெருஞ்சோற்றினை உண்டு மகிழ்ந்த படைகள் வஞ்சி சூடிப் போருக்குப் புறப் படும்.' போரில் தும்பை மலைந்த வீரர் இறுதியில் வாகை சூடுவர். போரில் தோற்ற அரசர்கள் வெற்றி பெற்ற வேந்தனுக்குப் பலவகையான பொருள்களைத் திரையாகக் கொடுத்து வணங்குவர். செங்குட்டுவனுக்கு வச்சிர நாட்டு 34. சிலப்பதிகாரம்; கால்கோட் காதை : 156.162. 35. 31–25 : * > ג ב. -- 36. כ כ இந்திரவிழவூரெடுத்த காதை : 90-92. 37. 5 * கால்கோட் காதை : 43-45. 38. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; புறத்திணை யியல் : 13. 39. சிலம்பு; கால்கோட்காதை : 48.49. 40. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; புறத்திணை யியல் : 8. 41. சிலம்பு; கால்கோட் காதை : 50-51. 42. 5 : 5, 2 : 219.