பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 அரசன் முத்துப்பந்தரையும், மகதநாட்டு மன்னன் பட்டி மண்ட்பத்தையும், அவந்தி வேந்தன் தோரண வாயிலையும் திரைப்பொருளாகத் தந்தனர்.: H போரில் வீரங்காட்டி வெம்போர் புரிந்தவர்களுடைய ஆற்றலைப் பாராட்டி அவர்களுக்குப் பெரிய பட்டங்களை பும் போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களின் சந்ததி யார்க்குப் பொருள், நிலம் முதலியவற்றையும் அரசர் கொடையாகக் கொடுத்தனர். காவாநாவிற் கனகவிசயரை வென்ற பின்பு கங்கையின் தென்கரையில் தங்கிய சேரன் செங்குட்டுவன், போரில் விழுப்புண் பெற்று வீரசொர்க்க மடைந்தவர், தலையும் தோளும் அறுபட்டு இறந்தவர், சுற்றத்தினரும் மகளிரும் உடன்மடிய இறந்தவராகிய இவர்களுடைய மைந்தர்களையும், முன்னணிப் படையாம் துாசிப்படையில் நின்று வெற்றி கண்டவர்களையும், மாற்றார்களுடைய தேர்வீரர்களைக் கொன்று குவித்தவர் களையும், பகைவர்களுடைய தலைகளைக் கொய்திட்டவர் களையும், மார்பில் விழுப்புண் பட்டவர்களைத் துரத்தி வெற்றி கண்டவர்களையும், தம்பால் வருக என்று அழைத்து அவர்களுடைய வெற்றியை விம்மிதத்தோடு பாராட்டிப் பொன்னாலாகிய வாகைப்பூக்களை மிகுதி யாகக் கொடுத்து, குளிர்ந்த நஞ்சை நிலமும் வழங்கிப் பெருமைப்படுத்தினான். போரில் தோற்ற அரசர்களைச் சிறைப்படுத்துதல் அக்கால வழக்காகும். செங்குட்டுவனு டைய வடநாட்டுப் போரில் தோற்றோடிய பகைவர் துறவி களாகவும், கூத்தர்களாகவும், சடைமுடியராகவும், இசைப் புலவர்களாகவும் வேடம் புனைந்து தப்பியோட முயன்ற போது அவர்களைச் செங்குட்டுவன் சிறைப்படுத்தித் தன் நாட்டுக்குக் கொண்டு வந்தான். தோற்றோடியவரை, சடைமுடி புனைந்தோரைச் சிறைப்படுத்தி வருதல் தகாத 43. சிலம்பு, நீர்ப்படைக் காதை 36. 44. 47–25 : * 5 לג כ. 45. 191-177 : د و . ככ.