பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339 செயலென்று சோழனும்: பாண்டியனும் சொல்லினர் என்பதும் சிலப்பதிகாரத்தால் அறியப்படுகிறது. வெள்ளணி நாளில்:-அரசனின் பிறந்த நாளில் எருதுகள் உழவொழி யும்.* பகை மன்னர்கள் விடுதலை செய்யப் பெறுவர்.'" அந்நாளில் பகையரசர் விருந்தின் அரசர்களாகவும் மாறி விருந்தினர் மாளிகையில் மகிழ்ந்துறைதலும் உண்டு." மேலும் தம் பெருமையை உணர்ந்து பணிந்த பகைவர் களைத் தம் நண்பர்களெனக் கொண்டு மன்னர்கள் நடாத்துவதும் உண்டு." 2 சிலப்பதிகார காலத்தில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம் என்ற நால்வகைச் சமயங்களும் தமிழ்நாட்டில் பரவியிருந்தன. ஒரு குடும்பத் தைச் சார்ந்தவர் பல்வேறு சமயங்களை மேற்கொண்டு ஒழுகினர். ஆனாலும் சமயப்பொறையுடன் அமைதி: காத்தனர் வீடும் நாடும் சமயப் பூசலின்றித் திகழ்ந்தது. வடநாட்டுச் செலவுத் தொடக்கத்தில் செங்குட்டுவன் தன் குலதெய்வமாகிய சிவபெருமானை வணங்கி அவன் அடிகளைத் தலைமேல் தாங்கி யானையின் மீது அமர்ந்து புறப்பட்டான்." அதே நேரத்தில் திருவனந்தபுரத்துத் திருமால்கோயில் அர்ச்சகர் அக்கோயில் பிரசாதத்தைச் செங்குட்டுவன் கையில் கொடுக்க, செங்குட்டுவன் அதனை மறுக்காது வாங்கித் தோளில் மகிழ்வுடன் அணிந்து கொண்டான்." இது செங்குட்டுவனுடைய சமயப் பொறையினைக் காட்டுவதோடு அக்கால சமய நிலை 46. சிலம்பு; நடுகற் காதை : 90.93. 47. 104-108 : : 5 נג. 48. נג நீர்ப்படைக் காதை : 212-250. 49. 5 : J. J. : 227-229. 50. נות நடுகற் காதை : 195. .197-198 : : ; وو . ٥1 52. , , 55 : 199-202. 53. נל கால்கோட்காதை : 54.57. .62-67 : و و " " وو .54