பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன். -அகம்; 3.96: 16–19. இச்செய்தியினை, அமைவரல் அருவி இமயம் விற்பொறித்து என்று 2ஆம் பத்துப் பதிகமும், == கடற்கடம் பெறிந்த காவலன் வாழி விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வா றித்த ಇನ್ಜ 23 : 81–82. என்றும், மாநீர் வேலிக் கடம்பெறிங் திமயத்து வானவர் மருள மலைவிற் பூட்டிய வானவன் -சிலம்பு, 25 : 1-2. என்றும் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றன. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை வென்று சிறைப்பிடித்து, அவர்கள் தலையில் நெய்யை ஊற்றிக் கைகளைப் பின்கட்டாகக் கட்டிக்கொண்டு வந்து, அவர்களிடமிருந்து திறையாக வயிரம் முதலிய பெருஞ் செல்வங்களைப் பெற்றுக் கொண்டதாக இரண்டாம் பத்தின் பதிகம் உரைக்கின்றது. அப்பகுதி வருமாறு: நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய்த்தலை பெய்து கைபிற் கொளீஇ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு பெறுவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி. இப்பகுதிக்கு விளக்கம் எழுதியுள்ள பதிற்றுப்பத்தின் பழைய உரைகாரர் அக்கால வழக்காற்றினைப் பின் வருமாறு சுட்டுகின்றார்;

இதன் பதிகத்து யவனர்ப் பிணித்தென்றது யவனரைப் போருள் அகப்படுத்தியென்றவாறு. நெய்த்