பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 யினையும் புலப்படுத்துகின்றது எனலாம். தமிழ்நாட்டின் மூன்று தலைநகரங்களிலும் ஒவ்வொரு கடவுளர்க்கும் கோயில்கள் இருந்தன. பல சமயவாதிகளும் தத்தம் சமயப் பெருமைகளை விளக்கிச் சொற்பொழிவு. ஆற்றினர். - i சிலப்பதிகாரத்தில் இயலிசை நாடகமென்னும் முத் தமிழும் பேசப்படுகின்றது. செங்குட்டுவன் வடநாடு சென்றபொழுது அவனுடன் கூத்தரும் சென்றனர். வஞ்சி நகருக்குத் திரும்பிய பின்னர் செங்குட்டுவன் மனைவியுடன் நிலாமுற்றத்தில் வீற்றிருந்தபோது பறையூர் வாழும் கூத்தச் சாக்கையன் சிவபெருமான் திரிபுரம் எரித்த காலையில் உமையம்மையை இடப்பக்கத்தே கொண்டு ஆடிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தினைக் கண்டு களித் தான். சிவந்த அடிகளிலுள்ள தண்டை ஒலிக்கவும், சிவந்த கைகளிலுள்ள பறை முழங்கவும், கண்கள் ஆயிரம் திருக்குறிப்புக்களைக் காட்டவும், சிவந்த சடை பறந்து திசைகளில் பரவவும், பாடவும் அசையாது, தோல்வளை நடுங்காது, மேகலை ஒலியாது, நீண்டகுழை அசையாது, கூந்தல் அவிழாது உமையம்மையை இடபபக்கத்தே கொண்டு இறைவன் ஆடிய கூத்தினைப் பறையூர் கூத்தச் சாக்கையன் ஆடக் கண்டு அகமகிழ்ந்த செங்குட்டுவன் அவனுக்குப் பரிசில் நல்கிப் பெருமைப்படுத்தி அனுப் பினான்." . சோழ மன்னன் மாதவி, அரங்கேறி நடனம் நிகழ்த்திய பின்னர் தலைக்கோல் அரிவை' என்ற பட்டம் வழங்கி அதனோடு ஆயிரத்து எண் கழஞ்சு பொன்னும் மாலை யொன்றும் அளித்து,அவ்வாடற் கலை அரசியைப் பாராட்டி rைான். 98 - 55. சிலம்பு; இந்திரவிழவூரெடுத்த காதை : 169-178. 56. 5 5 - » : 181. 57. , , நடுகற் காதை : 42-78. r - 58. • அரங்கேற்று காதை : 159-163.