பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

391. சங்க இலக்கியங்கள் போரில் பொருது மடிந்த வீரtர்க்கு, நடுகல் எழுப்பப்படுவதைக் குறிக்கின்றன.ச9 ஆனால், சிலப்பதிகாரம் முதன் முதலாகக் கண்ணகியாகிய பெண், னிற்கு- பத்தினிக் கடவுளுக்குக் கோயிலெடுக்கும் நிகழ்ச்சி. யைக் குறிப்பிடுகின்றது. பத்தினிப் பெண்டிர் நிறைந்த நாடு மழை பொய்க்காது வளம் நிறையும் என்றும், மன்னர் கொற்றம் சிதையாது நிலைக்கும் என்றும் கவுந்தியடிகள் ப த் தி னி ப் பெண்டிர் பெருமையைப். பாங்குற எடுத்து மொழிந்தார். f - மக்கள் அரசநீதி காரணத்தால் அச்சமின்றி இனிது வாழ்ந்தனர். புகார் நகரத்தின் வெள்ளிடை மன்றத்தில் அளவும், நிறையும், எண்ணும் குறிக்கப்பட்ட பொதிகள் குவிந்து கிடந்தன. அவற்றைக் காப்போர் இல்லை. அந்நகருக்கு வந்த புதியவர் யாவராயினும் அங்குள்ள பொதிகளை எடுத்துச் சென்றால் அவர்கள் அவைகளைச் சுமந்து திரிந்து கழுத்துக் கடுக்க வருந்த வேண்டுமே யொழிய அப்பொதிகளை யாரும் வாங்க மாட்டார். எனவே களவினால் பொருள் ஈட்டி இனிது வாழலாம் என்ற எண்ணம் அந்நாளில் மக்கள்பால் இல்லை. மக்கள் மன்னரை மதித்து ஒழுகினர். நானில மக்களும் தங்கள் வழிபடு கடவுளர்க்கு விழவெடுத்து குரவையாடும்பொழுது அக்கூத்தின் இறுதியில் தம் அரசன் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்தினர்.68 மண வாழ்த்திலும் அரச வாழ்த்தே இறுதியாக இலங்கியது.”* ஆய்ச்சியர் மூவேந்தரையும் திருமாலாகக் கூறினர். வட நாடு சென்ற செங்குட்டுவன் பிரிவால் வருந்திய மக்கள் --- - 59. அகநானூறு 67 - 8-10, 131 : 8.11. புறநானூறு: 221 : 11-13. 60. சிலம்பு; குன்றக் குரவை : 26. o 61. , , மங்கல வாழ்த்துப் பாடல் : 64-68,