பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சிலப்பதிகாரம் காட்டும் சமுதாய வரலாறு கவிதை மக்கள் வாழ்க்கையின் உரைகல் என்பர் அறிஞர். மனிதர் வாழ்க்கையில் கண்டதையும் துய்த்த தையும் கவிதை வெளிப்படுத்துகின்றது என்பர். சுருங்கச் சொன்னால் கவிதை மக்கள் வாழ்க்கையினை வடித்துக் காட்டும் ஏடு எனலாம். ஒரு நூல் அந்த நூல் எழுந்த காலத்தின் பிரதிநிதி எனலாம். எனவே ஒரு காலத்து நூலில் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையினை உள்ளவாறே காணலாம். பிற்கால இலக்கி யங்களில் சில புனைந்துரைகள் புகுந்தாலும், பழைய இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்கள் உள்ளதை உள்ள வாறு எடுத்துக் கூறு த லி ல் வல்லனவாகும். சங்க காலத்தை யொட்டி யெழுந்த சிலப்பதிகாரத்திலும் வரம்பு கடவாத கற்பனையினையும் மனித வாழ்வை உள்ளவாறே விளக்கியிருக்கும் மாண்பினையும் காணலாம். தமிழின் தொன்னூலாகிய தொல்காப்பியம் இலக்கண நூலேயாயினும் அந்நூலின் ஒரு பகுதியான பொருளதி காரம் மக்கள் வாழ்வினை வடித்துக் காட்டக் காணலாம். தொல்காப்பியனார் கூறுகின்ற வாழ்க்கைக் கூறுகள் பண்டைத் தமிழரின் வாழ்வியற் பாங்கினை உணர்ந்து கொள்வதற்குத் துணை செய்கின்றன எனலாம். தொல்காப்பியனார் நிலங்களை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், LΙΠΓιώύ) ώl) GΤ σύT ஐந்தாகப் பிரித்தார். SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 1. William Henry Hudson, An Introduction to the Study of Literature, p. 2. 2. டாக்டர் மு. வரதராசன், நற்றிணைச் செல்வம், முன்னுரை ப. 5 மற்றும் குறுந்தொகைச் செல்வம், LJ s 9-10.