பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 அவர் பாலையினைத் தனி நிலமாகக் கொள்ளவில்லை. முல்லையும் குறிஞ்சியும் வேனிற் காலத்தில் மழையற்ற நிலையில் வெயிலின் கொடுமையினால் வளங் குறைந்த தாகத் திரிந்த நிலப்பரப்பு பாலை என வழங்கப்பட்டது. சங்க இலக்கியங்கள் எனப் போற்றப்படும் பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும் தொகைநூல்களாகும். எட்டுத்தொகை நூல்களில் அமைந்துள்ள பாக்கள் பலரால் பல சமயத்தில் பாடப் பெற்றனவாகும். தனித் தனிப் பாக்களின் தொகுதிகளாகச் சங்க இலக்கியம் அமைந்துள்ள பான்மையினால் இப்பாக்களை இன்ன இன்ன நிலத்திற். குரியன என்று எளிதாகப் பிரித்துக் கூறினர். அகப் பாடல்கள் அனைத்தையும் நிலத்தாலும் ஒழுக்கத்தாலும் பிரித்துக் கூறும் மரபு தொன்றே தொடங்கிவிட்டது. பாட்டில் வரும் நில வருணனை, குறிப்பிடப் பெற்றும் ஒழுகலாறு இவற்றைக் கொண்டு ஒரு பாட்டினை இன்ன நிலத்திற்குரியது என எளிதிற் பகுத்துணர்ந்து விடலாம். தனிப் பாடல்களைப் பொறுத்தமட்டில் அமைந்துள்ள இவ்வுண்மை, தமிழில் முதற்கண் எழுந்த தொடர்நிலைச் செய்யுளாம் - கா ப் பி ய மா ம் சிலப்பதிகாரத்திற்கும் பொருந்தி வரக் காணலாம். o இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முப்பது 'காதைகள் கொண்டதாகும். இவற்றின் சில காதை களில் முழுக்க முழுக்க அந் நிலத்து மக்களின் வாழ்வு, அவர்தம் கடவுள் கொள்கை, வழிபாடு, அவ்வவ் நிலத்திற் படு பொருள்கள், ஆடல்பாடல்கள் முதலியனவற்றை விளங்க எடுத்துரைதுள்ளார். அக்காலத்து வழங்கிய நாட் டுப் பாடல்களைக் கவியரங்கேற்றிய பெருமை-தம் காவி யத்தில் தக்க இடந்தந்து போற்றி வாழ வைத்த பெருமை

  • -

3. சிலப்பதிகாரம்; காடுகாண் காதை : 64.66. 4. A “Kātai” is that which contains a story.