பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

395 இளங்கோவடிகளையே சாரும். ப ண் ைட த் தமிழ் ம்க்களின் ஆடல் பாடல்களைக் கதையின் இடையே. புகுத்திக் கதையோடு இணைய வைத்து நமக்குப் பழந்தமிழ். மரபினைக் காட்டுகின்றார் இளங்கோவடிகள். கதை. யையும் இந்நில மக்கள் வாழ்க்கையையும் பிரித்துக் காண்பது இயலாது" என்பர் ஆராய்ச்சியாளர்." - குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கையினைக் குன்றக் குரவை தெற்றெனக் காட்டுகிறது. குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறவர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் குறிஞ்சித் தெய்வமான முருகனை வழிபட்டனர்" இக் குறவர்கள் குரவைக் கூத்தாடினர்; கொடிச்சியர் பாடி மகிழ்ந்தனர். தினைப்புனங்களில் வந்து படியும் கிளிகளையும் . பறவைகளையும். த ட் ைட கொண்டு ஒட்டினர்.” தினைக்கதிர்களை உரலில் இட்டுக் குற்றும் பெண்கள் வள்ளைப் பாட்டுப் பாடினர். சிலர் தெய்வம் பராவினர். குற்வர் மலை மீது கட்டியிருந்த தேன் கூடு. களிலிருந்து தேன் எடுத்தனர். பரண் மீதிருந்து பறவை. களை யோட்டித் தினைப்புனம், காத்தனர் சில குறவர். அருவி நீரில் பெண்கள் குளித்து மகிழ்ந்தனர். யானைப் பாகர் குழியில் விழுந்த புதிய யானைகளைப் பிடிக்க ஒலி: எழுப்பினர். - - - - - - ** மலைபடு பொருள்களாகச் சிலப்பதிகாரத்திலிருந்து நாம் அறிவன வருமாறு: யானை வெண்கோடு, அகிலின் குப்பை, மான் மயிராகிய வெண்சாமரை, தேன்குடங்கள், சந்தனக்குறை, சிந்துாரக்கட்டி, அஞ்சனத்திரள், அணியரி" தாரம், ஏல வல்லி, இருங்கறிவல்லி, கூவைக்கிழங்கினுாறு, _ _ 5. டாக்டர் மு. வரதராசன், இளங்கோவடிகள், ப. 57. 6. மு. சண்முகம், சிலப்பதிகாரக் கட்டுரைகள், ப. 122. 7. சிலம்பு; குன்றக் குரவை : 1. 8 * † காட்சிக் காதை : 26-34.