பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 கொழுங்கொடிக்கவலை, தெங்கின்பழம், தேமாங்கனி, :பச்சிலைமாலை, பலவின் பழங்கள், வெள்ளுள்ளி, கரும்பு, பூங்கொடி, கமுகின் செழுங்குலைத்தார், பெருங்குலை வாழையின் இருங்கனித்தார், ஆளியின்குட்டி, அரியின் குருளை, புலியின்குட்டி, யானைக்கன்று, குரங்குக்குட்டி, வளைந்த அடிகளையுடைய பிள்ளைக்கரடி, மலையிற் பாய்ந்து விளையாடும் வருடைமான், மடமான் மறி, கத்துாரிக்குட்டி, மாசறு நகுலம், பீலிமஞ்ஞை, நாவியின் பிள்ளை, கானக்கோழி, தேன்மொழிக் கிள்ளை. திருச்செந்துார், திருச்செங்கோடு, சு வா மி ம ைல என்னும் திருத்தலங்களில் எழுந்தருளியுள்ளவன் முருகன் என்றும், அவன் கடலினுட் சென்று மாமர வடிவில் நின்ற சூரனைக் கொன்றவர் என்றும் கூறி அவர்கள் முருக வேளைப் போற்றிப் பாடிப் பரவினர்.” - குன்றக் குறவனைக் காதலித்த குறமகள் தன் தலைவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரைந்து வாராமை யினால் அவனையே நினைந்து நினைந்து மெலிந்து போன்ால், அம் மெலிவு கண்ட தாய் அஃது முருகனால் வந்த நோய் என்று முடிவு செய்து, முருகனுக்கு விழா வெடுக்க முருகன் கோயில் பூசாரியை அழைத்து வெறியாட் டயர ஏற்பாடு செய்வாள். அவள் மெலிவின் உண்மைக் காரணம் உணராது வேலன் வருவானாயின் அவன் மடவன்; அவன் (பூசாரி) வேண்டுகோட்கிணங்கி ஆலமர் செல்வன். புதல்வன் வருவானாயின் அவன் அவனினும் மடவன் என்று கூறித் தோழி உண்மையைப் பிறர்க்கு உணர்த்தினாள் (அறத்தொடு நின்றாள்). தலைவி தான் விரும்பிய கணவ னையே மணக்க முருகன் அருள் சுரக்கவேண்டும்; பிழை மணம்-பிறரை மணந்து கொள்ளவேண்டிய நிலை ஏற் படுதல் கூடாது என்று வேண்டினாள். தலைவன் பலரறி 9. சிலம்பு; குன்றக் குரவை : 8. 10. * † 5 * : 11-20. *