பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

397 யும் மணத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று. விரும்பினாள். இவ்வாறு வரும் குன்றக் குரவைச் செய்தி கள் சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களில் காணும் செய்தி: களைப் பெருமளவில் ஒத்துள்ளன எனலாம். முல்லை நிலத்து மக்கள் வாழ்வு முல்லை நிலத்தில் வாழ்வோர் ஆயர் எனப்படுவர். சிலப்பதிகாரத்தில் வரும் மாதரி ஆயர்குலப் பெண்ணாவள். அவள் வாழ்க்கையும் ஆய்ச்சியர் குரவையால் அறியலாகும் செய்திகளும் முல்லைநில மக்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுவனவாகும். பசுவினைப் பாதுகாத்து பால் கறந்து பிறருக்குப் பயனுற அளிக்கும் அவர்களுடைய தொழில் குற்றமற்ற தொழில் என்று இளங்கோவடிகள் பாராட்டுகின்றார். பசுக்களை வளர்த்தலேயன்றி ஏறு. களையும் அவர்கள் வளர்த்தனர். எழுவகையான ஏறுகளின் பெயர்களை இளங்கோவடிகள் காரி, நெற்றிச்சுட்டி யுடையது, மல்லன்மழவிடை, நுண்பொறிவெள்ளை, பொன் பொறி வெள்ளை, வென்றிமழவிடை, துநிற வெள்ளை என்பனவற்றைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வேறு களை ஆயர் விரட்டிவிடுவர். ஏறுகளை அடக்கி வீரத்தினை வெளிப்படுத்திய காளைக்கே தங்கள் மகளிரை ஆயர்கள் மணம் செய்து கொடுத்தனர். இத்தகைய திருமண முறை பழமை சான்றது என்பதனை முல்லைக்கலியில் வரும் சில: பாடல்கள் கொண்டும் அறியலாம். முல்லைநிலக் கடவுள் கண்ணனாவர். ஆயர் மகளிர் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது தீய நிகழ்ச்சிகளுக்குரிய அறிகுறிகள் கண்டால் கண்ணனை வழிபட்டுக் குரவைக் கூத்தயர்வர். ஒரு பெண்ணைக் கண்ணனென்றும், பிறி தொருத்தியைப் பலராமன் என்றும், வேறொருத்தியைப் பின்னை என்றும், மற்றும் பிற மகளிரை வேறு பெயரிட்டும். கோலம் செய்வித்துக் குரவையாடி மகிழ்தல் அவர்தம் இயல் பாகும். கண்ணன் கன்றைக் குறுந்தடியாகக் கொண்: