பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 டெறிந்து விளங்கனியை உதிர்த்தான்; கொல்லையில் நின்ற குருந்த மரத்தை ஒடித்தான்; யமுனை ஆற்றங்கரையில் நீராடிய கோபியர்களின் ஆடைகளை ஒளித்து வைத்தான்; அவன் இப்பொழுது வந்தால் அவன் வாயால் முல்லையந் திங்குழல் கேட்டு மகிழலாம்' என்று பாடி ஆடி மகிழ்ந் தார்கள். ! மருத நில மக்கள் வாழ்வு வயலும் வயலைச் சார்ந்த நிலமான மருதத்தில் வாழ்ந்த மக்கள் வேளாளர் எனப்படுவர். வான்பொய்ப் பினும் தான் பொய்யாக் காவிரியாறு அவர்கள் வாழ்க் கையை வளப்படுத்தியது: அவர்கள் உழு தொழிலுக்குப் பழுது வராமல் பாதுகாத்தது. நாளும் செல்வவளம் செழிக்கச் செய்தது. குடகுமலையிலிருந்து புறப்பட்டு அகில், சந்தனம் முதலிய நறுமணம் நிறைந்த கட்டை களைச் சுமந்துவந்து காவிரியாறு புகார்த்துறையில் கடலில் புகுந்தது. காவிரியின் இருமருங்கும் இருந்த கழனிகளில் செந்நெல்லும் கரும்பும் செழிக்க வளர்ந்திருந்தன. நீர் நிலைகளில் தாமரைக்காடுகள் பூத்துக் குலுங்கின. கம்புட் கோழி, கணைகுரல்நாரை, செங்காலன்னம், பைங்கால் கொக்கு, கானக்கோழி, உள்ளான் முதலிய பறவைகள் பேரொலி எழுப்பின. சேற்றில் சிக்கிய எருமை தினவெடுத்த தனது முதுகால் பிரிக்கட்டின்மீது உராய அதனின்றும் பலவகைப்பட்ட நெற்கள் சரிந்தன. அதனைக் கண்ட பள்ளரும் களமரும் அவ்வெருமையை அதட்டி ஒட்டினர். கடைசியர் செங்கயற் கண்களும் வளையணிந்த தோள் களும் உடையவராவர். அவர்கள் வயல்களில் களைகளைக் களைந்து நாற்று நட்டனர். காலையில் கூந்தலில் அணிந்த 11. சிலம்பு; ஆய்ச்சியர் குரவை. (19) 12. > 5 கானல்வரி : 4 மற்றும் கடலாடு காதை o 30-31.