பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

399 ஆக்களைக் களைந்து நடவு முடிந்தபின் முடிநாற்றை நறுக்கிச் சூடிக்கொண்டனர். அவர்களுடைய உடம்பில் சேறு ஆங்காங்கு விளங்கின. மயக்கும் கள்ளை உண்டு அவர்கள் பண்ணோடு இயையாத பாக்களைப் பாடிக் களித்தனர். உழவர்கள் நெற்கதிர், அறுகம்புல் முதலிய வற்றை மாலைகளாகக் கட்டித் தங்கள் கலப்பையிற் சூட்டி கடவுளைத் தொழுது ஏர்மங்கலமாகச் சில பாடல் களைப் பாடிச் சேறுபட்ட வயல்களை உழுதனர். அவர்கள் பாட்டொலி உலகையே இரு கூறாக்குவதுபோல் ஒலித்தது. விளைந்த நெற்பயிர்களை அறுத்துக் களத்தில் குவித்துக் கடாவிட்டுக் கூளத்தினின்றும் நெற்கதிர் மணிகளைப் பிரித்து நின்றனர். அதுபோது தங்கள் செயலில் சோர்வு ஏற்படாவண்ணம் முகவைப் பாட்டுகளைப் பாடி மகிழ்ந் தனர். கிணைப்பொருநர் மாடு, பயிர், உழுதொழில் வாழ்க்கை முதலியன பெருகவேண்டும் எனப் பாடினர்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ் காண்பர் நெற்கதிர் விளைக்கும் உழவர்' என்று திருவள்ளுவர் குறிப்பிடுவர். மேலும் அவர் தாம் பிறரிடம் சென்று இறவாமல் தம்மிடம் இரந்து வந்தவர்க்கு ஒன்று ஈயும் தகுதியுடையவர் உழவர் என்பர். இவ்விரு கருத்துகளையும் உள்ளடக்கியே இளங் கோவடிகளும், இரப்பவர் சுற்றத்தையும், புரப்பவர் கொற்றத்தையும் தம் உழவுச் சால்களிடத்து விளைவித் தவர் வேளாளர்' என்று புகழ்கின்றார். காவிரியாற்றின் தவப்புதல்வர்களாகிய அவர்கள் செல்வவளம் நிறையப் பெற்றவர் என்பதனை, தூற்றாமல் குவிக்கப்பட்டிருந்த நெற்பொலியில், ஆலையின்கண் வெல்லம் அடுவதற்குப் பாகு காய்ச்சிய புகை சென்று சூழ்ந்தநிலை, மஞ்சு தவழும் மலைபோலக் காட்சியளித்தது என்ற வருணனை மூலம் எடுத்துக் காட்டுகின்றார்.

மருதநிலக் கடவுள் இந்திரன். காவிரி கடலொடு கலக்கும் காவிரிப்பூம்பட்டினத்தில் சித்திரைத் திங்களில் சித்திரை நாளன்று தொடங்கி 28 நாள்கள் இந்திரனைப்