பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவி வழிபடும் இந்திரவிழா 28 நாள்கள் நடைபெற்றது. அரசியல் ஆதரவுபெற்ற மக்கள் மகிழ்ந்து எடுக்கும் பெரு விழாவாக இத்திருவிழா திகழ்ந்தது. துரங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலம் முதல் இவ்விழா சீர்பெற. நடந்து வந்ததனைச் சிலப்பதிகாரம் காட்டும். மழைக்குக் கடவுள் இந்திரன். எனவே இவ்விழா நடைபெறாவிட் டால் மாரி சுருங்கிக் கேடு பெருகும் என்பது அக்கால மக்கள் நம்பிக்கை. புகார் நகரில் வெள்ளிடைமன்றம், இலஞ்சி மன்றம், நிழல் கால் நெடுங்கல் நின்ற மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் என்று ஐவகை மன்றங்கள் இருந்தன. இம்மன்றங்களிலெல்லாம் பலிக்கொடை வழங்கிய பின்னர் மக்கள் இவ்விழாவினைத் தொடங்கினர். வச்சிரக்கோட்டத் திலுள்ள மனங்கெழு முரசை யானையின் பிடரிமேல் ஏற்றி விழாவின் தொடக்கத்தையும் முடிவையும் கூறி முரசறைந்: தனர். அக்கோட்டத்திலுள்ள மங்கல நெடுங்கொடியை வான் நோக்கிப் பறக்கவிட்டனர். நகரில் மாளிகைகளி லெல்லாம் மக்கள் மரகதமணியும் வயிரமும் பதித்த துரண் களை நட்டனர். மாளிகையின் வாயில்களில் தோரணங் களைத் தொங்கவிட்டனர். வீதிகள்தோறும் பசும்பொற். பூரணகும்பம், பாலிகை, பாவை விளக்கு, பசும்பொற் கொடிகள், துர மயிற் கவரி, சுந்தரச்சுண்ணம் இவைகள் செறிந்திருந்தன. ஐம்பெருங்குழுவினர், எண்பேராயத் தார், அரச குமரர், பரத குமரர், குதிரைவீரர், யானை வீரர் ஆகியோரெல்லாம் தெருக்கள்தோறும் ஒருங்கு திரண்டு நின்று நம் அரசன் மேம்பாடுற்றுக் கொற்றம் கொள்வானாக!' என வாழ்த்தினர். ஆயிரத்தெட்டரசர் தலையிற் சுமந்து வந்த காவிரியின் மங்கல நீரால் விண் ணாட்டவரும் மண்ணாட்டவரும் மருளும்படி இந்திரனை விழுநீராட்டினர். பிறவா யாக்கைப் பெரியோனாம் சிவன் - 13. சிலம்பு; இந்திரவிழவூரெடுத்த காதை : 64.66. மற்றும் கடலாடு காதை : 5.6. 14. .ג ל இந்திரவிழவூரெடுத்த காதை : 71.73.