பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

401 கோயிலிலும், முருகன் கோயிலிலும், பலராமன் கோயி லிலும், நெடுமால் கோயிலிலும், வாசவன் கோயிலிலும் வேத முறைப்படி ஒமங்கள் நடைபெற்றன. இந்திரவிழா இவ்வாறு சிறப்பாக ஒரு பக்கத்தே நிகழ, மற்றொரு பக்கத்தில் நால்வகைத் தேவர், பதினெட்டுக் கணங்கள் ஆகிய வேறுவேறு கடவுளர்களுக்கும் திருவிழாக் கள் நடைபெற்றன. அறவோர் பள்ளிகளில் தருமபோத னையும் புராணச் சொற்பொழிவுகளும் நிகழ்ந்தன. சோழ மன்னன் அருள்சுரந்து பகை மன்னர்களை அன்று சிறை வீடு செய்தான். எங்கும் இசை முழக்கம் பெருகி மக்களை மகிழ் வித்தது. மறுகுகளிலும் (சிறு தெரு) பெருந்தெருக் களிலும் ஓயாது முழவுகள் முழங்கிக்கொண்டிருந்தன. இவ் வாறு 28 நாள்கள் இந்திரவிழா இனிமையுற நடந்தது. 29 ஆம் நாள் புகார் நகர மக்கள் அலையெனத் திரள் திரளாகக் கடற்கரை சென்று கடலாடி மகிழ்ந்தனர். கடற் கரை மருங்கில் பல்வகை விளையாட்டுகளை ஆடிக்களித் தனர். இவ்வாறாக மருதநில மக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியில் திளைத்துத் துலங்கியது. நெய்தல் நில மக்கள் வாழ்வு கானல்வரியில் நெய்தல் நில மக்கள் வாழ்வு நன்கு படம் பிடித்துக் காட்டப்படுகின்றது. நெய்தல்நில மக்கள் பரதவர் எனப்படுவர். கலத்தில் கடலிற் சென்று மீன் பிடித்து வாழ்வதே இவர்களுடைய வாழ்க்கையாகும். இரவு நேரங்களில் அவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்களுடைய படகுகளில் சிறிய விளக்குகள் எரிந்தன. கடல் நடுவில் இவ்விளக்குகளைக் கண்டு கரையிலுள்ளோர் நம்பிக்கை ஒளி பெற்றனர். மணல் மண்டிக் கிடந்த 15. சிலம்பு; இந்திரவிரவூரெடுத்த காதை : 169.173. 16. ג ג கடலாடு காதை : 161.174. 17. : 5 கானல் வரி : 17.22. சே. செ. இ-26