பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402, நெய்தற் கரையோரம் புன்னை மரங்கள் செழித்து வளர்ந்த திருந்தன. கடல்விளையாட்டு காணச் சென்றவர்க்கு இப்புன்னை மர நிழல்கள் உதவின. பரதவப் பெண்கள் மணலில் சிற்றில் இழைத்து விளையாடி மகிழ்ந்தனர். அவர்கள் இயற்றிய சிற்றில்களை அலைகளால் மோதுண்டு சங்குகள் அலைகளுடன் கரையோரம் வந்து அழித்துச் சென்றன. பரதவர் தாம் பிடித்த மீன்களைக் கடற்கரை மணலில் பரப்பி உலர்த்தினர். அவ்வுலரும் மீன்களைப் பறவைகள் கவர்ந்து செல்லாதவாறு பரதவ மகளிர் கையில் கோலுடன் காவல் புரிந்தனர். மீன் பிடித்து ஈரமான வலைகளைப் பரதவர் தம் சேரி முன்றிலில் விரித்துக் காய வைத்தனர். இவையே கானல்வரி கொண்டு நாம் அறியலாகும் நெய்தல் நில மக்களின் வாழ்க்கை இயல்பு களாகும். பாலை நில மக்கள் வாழ்க்கை முறை பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் வேட்டுவர் என வழங்கப்பட்டனர். வேட்டுவவரி அவர்கள் வாழ்க்கை முறையினை விளங்க உரைக்கின்றது. இம்மறக்குடி மக்கள் வழிச்செல்வோரைக் கொல்லல், கொள்ளையடித்தல், பசுக்களைக் கவர்தல் முதலிய தொழில்களைச் செய்தனர். இவற்றால் வளம்பெற்றனர். தம்மை எதிர்த்த பகை வரைத் தம் வாளுக்கு விருந்தாக்கி மகிழ்ந்தனர். நோயால் இறந்து சுடப்படாத மேனியை உடையவர்கள் அவர்கள். அவர்கள் வழிபடு தெய்வம் கொற்றவையாகும். வெற்றி தரும் கொற்றவையைப் பரவி அவர்கள் கூத்தாடினர். வனப்பு மிகுந்த வரிப்பாட்டுகளை வகையுறப் பாடினர். மறவர்குல மகளாகிய ஒருத்தி தன் தடங்கையில் ஒருநாள் நெடிய வில்லுடன் ஊர்மன்றத்தின் நடுவே தோன்றினாள். மறவர் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடனைக் கேட்டாள். இதுகாறும் நேர்த்திக் கடனைச் செலுத்தாமல் காலத்தை நிகழச் செய்த மறக்குடி மக்களைக் குறை கூறினாள். அது