பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

403 போது அவர்கள் தங்கள் கொடுந்தொழிலை மறந்து தம் தவற்றை நினைந்து அறக்குடிபோல் அவிந்தடங்கினர். மறவர் மகள், கொற்றவைக்கு நேர்ந்த-உடன்பட்ட பரவுக் கடனைத் தீர்த்தாலன்றி அவர்களுடைய விற்கள் வெற்றிபெற இயலா என எடுத்து மொழிந்தாள். கொற்றவையை அலங்கரித்து வேட்டுவர்கள் விழா எடுத்தார்கள். குமரியின் கூந்தலைச் சடையாகக் கட்டி அதில் பாம்புக்குட்டி வடிவில் அமைந்த பொன் ஞாணைச் சுற்றினர். பன்றியின் கோட்டைப் பறித்து அதைப் பிறையாகச் சுற்றினர். புலிப்பற்களைத் தாலியாகக் கட்டினர். புலியின் தோலை மேகலையாகக் கட்டினர். வில்லை வளைத்துக் கட்டி அவள் கையில் கொடுத்து அவளைக் கலைமான்மேல் ஏற்றி அமர்த்தினர். பாவை, கிளி, கானக்கோழி, வில், மயில், பந்து, கழற்சிக்காய் முதலியனவற்றை அவள் கையில் தந்து வணங்கினர். வண்ணம், சுண்ணம், தண்ணருஞ் சாந்து, புழுக்கல் நோலை, விழுக்கு டைமடை, பூப்புகை, விரை முதலிய பொருட்களை ஏவற் பெண்கள் ஏந்திப் பின்வருவர்; ஆறறி. பறை, சூரைச்சின்னம், கோடு, கொம்பு, மணி முதலிய வாச்சியங்களை ஒரு பக்கம் ஒலித்தனர். இவ்வாறு வீரர் தரும் பலிகளைக் காடுகெழு செல்வியான கொற்றவை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டாள். கொற்றவைக்குப் பலவித மான சிறப்புகளையும் செய்து பலவாறு புகழ்ந்து கூறிக் கூத்தாடி மகிழ்வர் வேட்டுவர். இவையே சிலப்பதிகாரம் கூறும் பாலைநில வேட்டுவர் வாழ்வாகும். சாதி வேற்றுமை பிறப்பினால் மக்களுக்குள் வேற்றுமையில்லை. ஆனால் நாளடைவில், செய்யும் தொழிலால் வேற்றுமைப்பட்டுப் பல்வேறு வகுப்பினராகப் பிரிந்தனர். திருவள்ளுவரும், 18. சிலம்பு; வேட்டுவ வரி; வள்ளிக்கூத்து (5).