பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் 7:

என்றார். தொழிலால் ஏற்பட்ட பிரிவு பின்னர்ப் பிறப்பிலேயே வேற்றுமை பாராட்டும் சாதிப்பிரிவினையாக மாறி விட்டது. தொழிலில் உயர்வு தாழ்வு பாராட்டியதன் காரணமாக உயர்ந்த வகுப்பு, தாழ்ந்த வகுப்பு என்ற பிரிவுகள் ஏற்பட்டு உயர்ந்த தொழிலைச் செய்தவர்கள் உயர்ந்தோர் என்றும் இழிந்த தொழிலைச் செய்தவர்கள் தாழ்ந்தவர் என்றும் ஆயினர். கல்வி, அரசு காவல், வாணிகம், வேளாண்மை முதலிய தொழில்கள் உயர்ந்த தொழில்களாகக் கருதப்பட்ட காரணத்தால் இத்தொழில் களைச் செய்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர் உயர்ந்தோர் ஆயினர். இவ்வுயர்ந்தோர் பின்னர் தனித்தனி பிரிந்து நால்வகை வருணத்தாராக நிலைத்தனர். இந்நால்வகை வருணத்துள் அடங்காத மக்கள் பிறரும் வாழ்ந்தனர். மருதநிலத்திலே தொழில் காரணமாகப் பல வகுப்புகள் தோன்றின. = இலப்பதிகாரத்தில் மேலே கண்ட செய்தியின் உண்மை யினைக் காணலாம். காவிரிப்பூம்பட்டினத்திலே அரசவீதி, வணிகர் தெரு, மறையோர் இருக்கை, உழவர் உறையும் இடம் தனித் தனியே இருந்தன என்பதனை இந்திரவிழவூர் எடுத்த காதை எடுத்து மொழிகிறது. கடலாடுகாதையில் இந்திர 19. திருக்குறள்; பெருமை : 2. 20. சிலம்பு; ஊர்காண் காதை : 183.

நால்வகை வருணத்து நலங்கே ழொளியவும்

21. תום இந்திரவிழவூரெடுத்த காதை : 7-68.

கோவியன் வீதியுங் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர் மாட மறுகு மறையோ_ரிருக்கையும் வீழ்குடி யுழவரொடு விளங்கிய கொள்கை."

- இந்திரவிழவூரெடுத்த காதை : 40-43.