பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

405 விழாவின் இறுதியிலே கடற்கரையிலே நால்வகை வருணத் தினரும் கூடியிருந்து எழுப்பிய பேச்சொலி எல்லா ஒசை யினையும் அடக்கியது என்று குறிக்கப்பட்டுள்ளது. இந் நால்வகை வருணத்திற்கு அப்பாற்பட்டவர்களாக வேறுபல பிரிவினர் மருத்துவர், சோதிடர், முத்துக்கோப்போர், சங்கறுப்போர், சூதர், மாகதர், வைதாளிகர், நாழிகைக் கணக்கர், வேடம் புனைந்து சாந்திக் கூத்தாடுவோர், பாணர், விலைமாதர், கழைக்கூத்தாடிகள் முதலியோர் தனித்தனி இடங்களில் வாழ்ந்து வந்ததாக இந்திரவிழவூர் எடுத்த காதை குறிப்பிடுகிறது. மதுரை நகரிலும் நால்வகை வருணப்பிரிவைக் காட்டும் நால்வகைத் தெருக்கள் தனித்தனியே இருந்தன. வணிகர்கள், மன்னர் பின்னோர்' என்றும், அரசர் பின்னோர்' என்றும் சுட்டப்பட்டுள்ளனர். மேலும் பூதங் களில்கூட நால்வகை வருணப் பூதங்கள் இருந்தன என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.22 அந்தண பூதம், அரசப் பூதம், வணிகப்பூதம் வேளாளப்பூதம் ஆகிய நான்கும் மதுரைநகரைக் காத்து வந்தனவாகவும், கண்ணகி மதுரை யைத் தீக்கிரையாக்கியபோது இப்பூதங்கள் அந்நகரைக் காவாமல் விட்டு நீங்கின என்றும் அழற்படுகாதை" குறிப்பிடுகின்றது. (பூதங்களின் தோற்றமும் செயலும் கூடச் சிலப்பதிகாரத்தில் வருணிக்கப்பட்டுள்ளன.) அந்தணப்பூதம் வெண்மை நிறமுள்ளது. குடை, முக்கோல், கமண்டலம், சமத்து முதலியன கைகளிலும் பூணுரல் மார்பிலும் இருந்தன. அப்பூதம் நாவினால் வே த ங் க ைள நவின்றுகொண்டிருந்தது. அரசப்பூதம் கதிரவன் போன்ற செந்நிறமுள்ளது. தலையிலே முடியும் --- - 22. சிலம்பு; அரங்கேற்று காதை : 107. அந்தணர் அரசர் வணிகர் சூத்திரரென்று சொல்லப்பட்ட நால்வகை வருணப் பூதரையும் - அடியார்க்கு நல்லார் உரை.