பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 மார்பிலே மலர் மாலையும் இடையிலே பட்டாடையுடன் பல அணிகலன்களையும் அணிந்திருந்தது. முரசம், வெண் குடை, வெண்சாமரம், நீண்டகொடி, அங்குசம், வடிவேல், கயிறு முதலியவற்றைக் கையிலே கொண்டிருந்தது. வணிகப் பூதம் பொன்னிற மேனியை உடையது. தலையிலே மலர் மாலைகளையும் மார் பிலே கலவைச் சந்தனமும் அணிந்து அது சிவபெருமானைப் போன்ற தோற்றமுடன் காணப் பட்டது. கையிலே கலப்பையும் தராசும் இருந்தன. வேளாளப்பூதம் கருநிறமுள்ளது. க ரு ைம நிறமுள்ள ஆடையை உடுத்தி வேலைப்பாடமைந்த வெள்ளிப்பூண் களை அணிந்து மார்பிலே அகில், சந்தனம் முதலான சுண்ணக் கலவையைப் பூசியிருந்தது. கோட்டுப்பூ, கொடிப் பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகிய நால்வகை மலராலும் ஆகிய மலரைத் தரித்திருந்தது. கையிலே கலப்பையை ஏந்தி யிருந்தது.”* மேலே காணும் நால்வகை வருணப்பூதங்களின் வருணனை கொண்டு அக்காலத்து வாழ்ந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோரின் தோற்றங்களைக் காணலாம். இவற்றால் சிலப்பதிகார காலத்தில் தமிழ் நாட்டில் பல வகைப்பட்ட சாதிகள் இருந்தன என்றும், அவர்கள் பல்வகைப்பட்ட பழக்கவழக்கங்களைக் கொண் டிருந்தனர் என்றும், ஆயினும் அவர்கள் தாம்தாம் மேற் கொண்ட தொழில்களைச் செவ்வனே செய்து ஒற்றுமை யாக வாழ்ந்து வந்தனர் என்றும் அறியலாம். திருமண முறை தொல்காப்பியனார் களவு, கற்பு எனக் காதல் வாழ்வினை வகைப்படுத்துவர். கற்பெனப்படுவது களவின் வழித்தே என்ற மொழியும் பண்டைத்தமிழில் எழுந்த தாகும். திருமணத்திற்கு முன்னர்க் காதல் என்பதே இத் 23. சிலம்பு; கடலாடு காதை : 35.