பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

407 தொடரின் பொருளாகும். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பெறும் களவின் வழிவந்த திருமணம் என்பர் ஒருசார் அறிஞர்.24 ஆயினும் அறிஞர் பலரும் அஃது பெற்றோர் தம்முள் கலந்து ஏற்பாடு செய்த திருமணம் என்றே மொழிவர்.28 இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால் மணவனி காண மகிழ்ந்தனர்' என்ற சிலப்பதிகார அடிகள் களவின்வழி வாராக் கற்பினைக் காட்டும் என்பர். இதற்கு ஏற்பவே சிலப்பதிகார உரை யாசிரியர் அடியார்க்கு நல்லாரும் கோவலன் கண்ணகி திருமணத்தை வடநூலார் குறிப்பிடும் எண்வகை மணங் களில் ஒன்றான பிரசாபத்தியம் எனக் குறிப்பிடுவர்.21 பிரசாபத்தியத்தை விளக்கும்போது மைத்துன முறையான் ஒருவன் மகள் வேண்டிச் சென்றபோது மறாது கொடுத்தல் என்று விளக்கமும் வரைந்தார். எனவே கோவலன் கண்ணகி திருமணம் இருமுதுகுரவரும் ஏற்பாடு செய்த திருமணம் என்பது பெற்றாம். o அந்நாளில் திருமணம் செய்வித்தற்குரிய வயது ஆடவர்க்குப் பதினாறு என்றும் மகளிர்க்குப் பன்னிரண்டு என்றும் கொள்ளப்பட்டதாக அறிகிறோம். திருமணம் உறுதியானதும் பெற்றோர் அதனை நகரமாந்தர்க்கு _ 24. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்; குடிமக்கள் காப்பியம், ப. 102. 25. சில ம்பு; பதிகம் : 41-42. 26. இதனைப் பிரசாபத்தியம் என்பர் அடியார்க்கு நல்லார்; அது தமிழில் ஒப்பு என்று கூறப்படும்; ஒப்பாவது மைத்துனக் கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது என்பர். - ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை. 27. சிலம்பு; மங்கல வாழ்த்துப் பாடல் : 24-34. - .54–50 : : 5 |---- و, – .28