பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 அறிவித்தனர். யானையின் முதுகின்மேல் பெண்களை ஏற்றி நகரைச் சுற்றிவரச் செய்து மணச் செய்தியை பறை யறைந்து அறிவித்தனர். அப்பொழுது முரசு, முருடு, சங்கு முதலிய வாத்தியங்கள் ஒலித்தன. அரசன் நகரை வலம் வருதல் போலக் குடைகள் எழுந்தன. வைரமணித்துாண் தாங்கிய மண்டபத்தில் அழகிய மாலைகளைக் கட்டித் தொங்கவிட்டனர். நீலவிதானம் கட்டிய அழகிய முத்துப் பந்தலில் மணமக்களை அமரச் செய்தனர். சந்திரன் உரோகிணியைச் சேர்ந்த நல்லோரையில் மணவினை நிகழ்ந்தது.99 நல்லாவூர்கிழார் பாடியுள்ள அகநானுாற்றுப் பாடல் ஒன்று கொண்டு இதே கருத்தினை விளங்க அறி கிறோம். அதாவது சந்திரன் உரோகிணி நட்சத்திரத் தோடு பொருந்துகின்ற நாளே திருமணத்திற்கு ஏற்ற நாள் என்று கருதப்பட்டது. புதுமணல் பரப்பி மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தற்கீழ்த் திருமணம் நிகழ்ந்தது. ஆயினும் அத்திருமணத்தை மணமான மகளிர் நால்வர் இருந்து நடத்தினர். ஆனால் கோவலன் கண்ணகி திருமணத்தை மாமுதுபார்ப்பான் முன்னின்று நடத்தினான். மணமக்கள் தீயை வலம் வந்தனர். விளக்கம் அமைந்த அழகிய பெண்கள் சாந்து, நறும் புகை, மாலை, சுண்ணம், விளக்கு, நன்கலம், முளைப்பாலிகை, நிறைகுடம் இவை களை ஏந்தினர். இவள் தன் கணவனை ஒருபோதும் பிரியாமல் வாழ்க! இவனும் தன் தலைவியை அணைத்த கைகள் நெகிழாமல் வாழ்க! இவர்கள் தீமையற்று நலம் பெறுவார்களாக!' எனத் திருமணத்திற்கு வந்த முதியோர் வாழ்த்தினர். வாழ்த்தின் இறுதியில் தம் அரசனையும் வாழ்த்தி அவனுக்கு வெற்றி விளைவதாகுக!' என்றனர். தனி மனை வாழ்க்கை திருமணம் முடிந்ததும் பெற்றோர் புதுமணமக்களைத் தனிமனையில் இல்லறம் நடத்துவதைக் காண விழைந் 29. சிலம்பு; மனையறம் படுத்த காதை : 84-85.