பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

409 தனர். இவ்வாறு தனிமனைப் புகுத்தும் பெற்றோர் மண மக்களின் இல்லத்திற்கு வேண்டிய பொருள், ஏவற்கற்றம் முதலியவற்றைக் கொடுத்து மணமக்களைத் தனிமனைப் படுத்துவர். தனிமனைப் புகுத்துதல் அக்கால மரபென்று இதனால் விளங்குகின்றது. மகளிர் வாழ்க்கை கற்புடைப்பெண்டிர் தாம் கொண்ட கொழுநனையே தெய்வமாகக் கருதினர். தெய்வங் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது போன்று பெண்கள் தனி யாகச் சென்று பிற கடவுளரை வணங்குதல் இல்லை என்பது கோவலனைப் பிரிந்து தனிமைத் துயரெய்தி கண்ணகி வாழ்ந்த வாழ்வால் புலனாகிறது. தேவந்தி என்னும் கண்ணகியின் பார்ப்பனத்தோழி கணவனைப் பிரிந்த கண்ணகியின் வருத்தத்தைக் காண ஆற்றாது, சோம குண்டம் சூரியகுண்டம் மூழ்கிக் காமவேள்கோட்டம் சென்று தொழுது வரலாம்; தொழுது வரின் கணவனை விட்டுப் பிரியாது வாழலாம் என்று கூறிக் கண்ணகியை அழைத்த போது, கண்ணகி பீடன்று எனக் கூறி மறுத்தாள்' ஆயினும் கண்ணகி புகார் நகரை விட்டு வைகறையில் கோவலனோடு மதுரை நோக்கிச் சென்றபோது வழியில் பூரீகோயிலில் இடப்பட்ட ஒளிமிக்க சிலாவட்டத்தைத் தொழுது வலங்கொண்டு சென்றாள் என்பதனைக் காணும் பொழுது கணவனுடன் கோயில் சென்று வணங்குதல் உண்டு என்பது தெரியவருகிறது. கற்புடைமகளிர் இல்லறத்தின் சிறந்த பயனாக அறவோர்க்களித்தல், அந்தணரோம்பல், துறவோர்க் கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர்கோடல் ஆகிய இவைகளைக் கொண்டனர் என்பது கண்ணகி கோவலனிடம் இறுதியாகப் பேசிய பேச்சிலிருந்து அறி