பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் குறிப் பிட்டுள்ளார். - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள் விற்றிருந்தான் என்று பதிகம் குறிப்பிடுகின்றது. இவன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியுடன் போர் செய்து இறந்ததாகப் புறநானூற்றுப்பாடல் ஒன்று : குறிப்பிடுகின்றது. போர் என்னும் இடத்தில் அப்போர் நிகழ்ந்ததாகவும் அப்போரில் இருதரத்துப் படை மறவரும் யானைகளும் குதிரைகளும் மாண்டு வீழ்ந்ததாகவும், அதே போர்க்களத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் புண்பட்டுப் போர்க்களத்தில் விழுந்து சில காலம் உயிர் போகாமல் கிடந்தனர் என்றும் அப்பாட்டு குறிப் பிடுகின்றது. இந்நிகழ்ச்சியை நேரில் கண்டு கழாத் தலையார் பாடல் பாடினார் என்றும், அப்பாடல் மறக்கள வழி என்னும் துறையைச் சாரும் என்றும் குறிப்பிடுவர். பின்னர் நெடுஞ்சேரலாதன் போர்க்களத்து இறந்த செய்தி யினையும் கழாத் தலையார் பிறிதொரு பாடலில் பாடி யுள்ளார். சேரனும் சோழனும் போரில் புண்பட்டு வீழ்ந்து கிடந்த நிலையினை நேரிற் கண்டு பரணரும் ஒரு பாடல் பாடியுள்ளார். இதனால் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் K. G. Sesha Aiyar, Cera kings of the Sangam Period, P. 18. = K. A. Nilaknta sastri, A Comprehensive History of India, P. 519. 46. மயிலை சீனி. வேங்கடசாமி, சேரன் செங்குட்டு வன், ப. 12. 47. புறம், 368. 48. புறம்; 63. 49. புறம்; 62.