பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 கிறோம். பெண்கள் தம் கொழுநர் நலனைப் பேணினர். அறுசுவை உண்டி சமைத்து அவர்களுக்குப் பறிமாறினர். கண்ணகி மாதரியின் வீட்டில் தங்கியிருந்தபொழுது அவர்கள் தந்த சமையற்கலன்களை வைத்துக் கொண்டு பல்வேறு காய்களை அரிந்து அடுப்பு மூட்டி அட்டில் தொழில் செய்து தன் கணவனுக்கு அன்புடன் பரிமாறிய செயல் நன்கு அறியப்படும். குறுந்தொகைப் பாடல் ஒன்றும் கணவன் இனிது! இனிது! என அகமும் முகமும் மலர மனைவி செய்த புளித்த தயிர்க்குழம்பினை உண்ணும் செய்தி ஒப்பிடற்பாலது. வீடுகள் மக்களின் செல்வ வளம் அந்நாளில் மாண்புடையதாய் இருந்தது. வீடுகள் பெரியதாயும் பல மாடங்களை உடைய தாகவும் இருந்தன. கோவலனின் தனிமனை எழுநிலை மாடங்கள் கொண்டது. நிலாக்காலங்களில் இனிது உறைந்து மகிழ்தற்குரிய நிலா முற்றங்களை அந்நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் பாங்குற அமைத்திருந்தனர். வேனிற்காலத்திற்கு ஏற்றது போன்றும், குளிர்காலத்திற்கு ஏற்றது போன்றதுமான பள்ளியறைகள் மாறும் தட்ப வெப்பநிலைகளுக்கேற்ப வீடுகளில் மாண்புற அமைக்கப் பட்டிருந்தன. அவைகளில் சன்னல்கள் அமைந்திருந்தன. அவைகள் குறுங்கண் எனப்பட்டன. செங்கல்லே வைத்துக் கட்டாது பளிங்குற் கற்களால் கட்டப்பட்ட மனைகளும் ஒரு சில பாங்குறத் திகழ்ந்தன. பொற்கலங்களே அடுகளங் களாகவும் உண்கலங்களாகவும் வழங்கிய மனைகளும் அந் நாளில் மிளிர்ந்தன. ஏழைகள் சிறுகுடிசைகளில் வாழ்ந் தனர். அக்குடிசை வீட்டின் சுவர்கள் செம்மண் ஊட்டப் பட்டன. அவ்வீடுகள் குளிர்ந்த அழகிய காவணத்தை யுடையன. தாலப்புல்லால் வேயப்பட்ட அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தடுக்குகளை அவர்கள் உட்காரு வதற்குப் பயன்படுத்தினர்.