பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

411 ஊர்திகள் மக்கள் நடந்தே பல ஊர்களுக்கும் சென்றனர். கோவலன், கண்ணகி, கவுந்தி, கவுசிகன், மாங்காட்டு மறையோன் முதலியோர் நடந்தே சென்ற காட்சியினை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம்.30 செல்வம் படைத்த டவர் அரசன் ஏறுதற்கமைந்த கோவேறு கழுதைகளில் ஏறிச் சென்றனர். பெண்கள் தேர் அல்லது வண்டிகளில் சென்றனர். இந்திரவிழாவின் இறுதியில் கடற்கரைக்குச் செல்லும்பொழுது கோவலன் கோவேறு கழுதைமீதும் மாதவி வண்டியிலும் சென்றனர். அரசர்கள் யானை மீதும் தேர்மீதும் ஏறிச் சென்றனர். செங்குட்டுவன் வடநாட்டுப் பயணத்தொடக்கத்தில் தன் நகரில் யானை மீது இவர்ந்து சென்ற செய்தி அறியப்படுகிறது.62 திருமணச் செய்தியை ஊர் மக்களுக்கு அறிவித்தல், விழாச் செய்தியை நகர மக்களுக்குத் தெரிவித்தல், அரசனுடைய ஆணைச் செய்தியை மக்களுக்கு அறிவித்தல் முதலிய சமயங்களில் யானைகளின் முதுகின்மேல் முரசினை ஏற்றி முரசறைந்துநகரைச் சுற்றிவந்து அச்செய்திகளை மக்களுக்கு அறிவித் தனர். குதிரைகள் பெரும்பான்மையும் படைவீரர்க்குப் பயன்பட்டன." கூடாரவண்டிகளும் அந்நாளில் வழக்கிலி ருந்தன. சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்குரிய படிவம் சமைக்க வடபுலம் நோக்கிப்படைகொண்டு சென்ற போது அவனுடன் இருபதினாயிரம் வண்டிகள் பண்டங் களை ஏ ற் றி ச் சென்றனவாக வஞ்சிக்காண்டத்துள் சொல்லப்பட்டுள்ளது.84 30. சிலம்பு; நாடுகாண் காதை : 38. 31. 2 3 கடலாடு காதை : 1.19-120. 32. 5 : கால்கோட் காதை : 60. 33. 5 - 5 : : 84 மற்றும் 134.

.135-136 : גי. وو .34