பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 ஊழ்வினையில் நம்பிக்கை உலகில் பிறந்த ஒவ்வொருவரும் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளின் பலனை இப் பிறப்பில் அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்பது அந்நாளைய கொள்கையாகும். தொல்காப்பியனார் ஊழ்வினையினைப் 'பால்' என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளார்.3 கணியன் பூங்குன்றனார் இயற்றியுள்ள புறநானூற்றுப் பாட லொன்றில், பேரியாற்றின் நீர்ப்போக்கின் வழியே செல்லும் ஒடம்போன்று உயிர்கள் ஊழ்வினையின் வழியே இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் ஊழ்" என்றே ஒர் அதிகாரம் வகுத்துள்ளார். ஊழிற் பெருவலி யாதொன்றும் இல்லையென்றும், ஊழ்வினை சூழினும் தான்முந்துறும் என்றும் ஒரு குறட்பாவில் அவர் குறிப்பிட் டுள்ளார். ஆயினும் முயன்றால் ஊழ்வினையை முறியடிக் கலாம் என்றும் பிறிதொரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். அF LI) Tை சமயத்தினர் எந்தக் காரணத்தாலும் ஊழ்வினையை மீறமுடியாது; அது உருக்கொண்டுவந்து தன் பயனை ஊட்டியே தீரும் என்ற கொள்கை உடை யவர்கள் ஆவர். சிலப்பதிகாரத்தின் பதிகமும் ஊழ் வினை உருத்துவந்து ஊட்டும்' என்பது அது விளக்கவந்த மூன்று கொள்கைகளில் ஒர் கொள்கையாகக் குறிப்பிடு கின்றது. சிலப்பதிகாரத்தில் பலவிடங்களில் ஊழ்வினை வற்புறுத்தப் பட்டிருப்பதனைக் காணலாம். மேலும் 35. தொல்காப்பியம்; சொல்லதிகாரம்; கிளவி யாக்கம் : 58. - 36. புறநானூறு: 192. 37. திருக்குறள்; ஊழ் 10. 38. சிலம்பு, ஊர்காண் காதை : 31.34. 39. பதிகம் : 55.57.