பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413 ஊழ்வினை காரணமாக நடந்தவை என்று பல நிகழ்ச்சி களும் குறிக்கப்பட்டுள்ளன." முதன்முதலில் கானல்வரியில் ஊழ்வினையை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். மாதவியின் கானல் வரிப் பாட்டால் மனம் மாறிய கோவலன், அவள் நடத்தையிலே ஐய முற்றான்; எனவே கடல்விளையாட்டிற்கென இந்திர விழாவின் இறுதி நாளில் அவளோடு வந்த கோவலன் யாழிசைபோல் ஊழ்வினை வந்து உருத்த, மாதவியை விட்டு நீங்கினான். அடுத்து, மாதவியை விட்டு நீங்கிய கோவலன் கண்ணகியிடம் நேரே வந்து, கடந்துபோன நிகழ்ச்சி களுக்கு நாணி, இழந்த பொருளை மீண்டும் அடைய வாணிபம் செய்யும் பொருட்டு மதுரைக்குச் செல் கின்றான். விடியற்காலையில் கீழ்த்திசையில் க தி ர் எழுவதற்கு முன்னேயே கண்ணகியுடன் புறப்பட்டான். அப்போது இளங்கோவடிகள் ஊழ்வினை வந்து சேர, அதன் ஏவலை மேற்கொண்டான்' என்று குறிப்பிட் டுள்ளார். கனாத்திறம் உரைத்த காதையின் கீழ்க் காணப்பெறும் வெண்பாவிலும் இவ் ஆழ்வினை வற். புறுத்தப்பட்டுள்ளது. முன்செய்த தீவினை வந்து இவன் உள்ளத்தைச் செலுத்துதலால்' கோவலன் மதுரை ஏகினான் என்று நாடுகாண் காதையில் குறிப்பிடப்பட் டுள்ளது. கொலைக்களக் காதையிலும் ஊழ்வினையே ஆட்சி புரியக் காணலாம். 40. சிலம்பு 7 ; 52; 9 : 78.79; 10 : 4; 16 : 148.153; 16 : 154-157; 16 : 212-2 17; 19 : 41-42; 19 : 45–46; 20 : 59-63; 23 : 27-30; 23 : 171-172; 24 : 5–6; 27 : 49-52; 27 : 57-65; 29 : 3. 41. சிலம்பு; கானல்வரி : 52.