பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 பாண்டிய நாட்டு மன்னன் நெடுஞ்செழியன் நீதிநெறி வழுவாத - கொடுங்கோன்மை அறியாத செங்கோல். வேந்தன். ஆயினும் அறநெறி தவறாத அவன் பொற் கொல்லன் சொல்லை நம்பிக் கோவலனைக் கொல்லப் பணித்தான். இதற்குக் காரணம் ஊழ்வினையே என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். வினை விளை காலம்' என்ற சொல்லால் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்" என்னும் கருத்தினை வற்புறுத்தியுள்ளார். அரசன் கட்டளையினை ஏற்றுச் சென்ற ஊர்க் காவலரும், பொற்கொல்லனும் :தீவினை சூழ்ந்த வலையிலே அகப்பட்டிருந்த கோவலனை அடைந்தனர். என்று குறிப்பிடுமுகத்தான் இளங்கோவடிகள் கோவலன் வினைக்கு ஆட்பட்டிருந்த நிலையினை விளக்கியிருக்கக் காணலாம். கோவலன் கல்லாக் களிமகனான காவலன் ஒருவனால் வெட்டுண்டு வீழ்ந்தான். இளங்கோவடிகள் இதனைப் பண்டை வினையின் செயல் என்றும், பாண்டியன் செங்கோல் கொடுங்கோல் ஆகும்படி, முன்னைத் தீவினை -யின் முதிர்ச்சியால் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தான். என்றும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். o கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி, ஆற்றொனாத் துயருற்றாள். அவள் அழுது அரற்றி, ஊரைச் சுற்றி வரும்பொழுது மன்னனால் செய்யப்பட்டது இக் கொலைத் தொழில்; ஆயினும் நான் செய்த திவினை, தான் இவ்வாறு எனக்குத் துன்பத்தைத் தந்தது என்று மற்றவர் சொல்லமாட்டார்களோ என்று சொல்லிப் புலம்பினாள். இவ்வாறு மூன்று முறை அடுத்தடுத்து அரற்றித் தீவினையின் செயலினைக் கண்ணகி குறிப்பிட்டுப் பேசுகின்றாள். கண்ணகியின் இக் கூற்றால் பாண்டியன், கோவலனைக் கொல்லும்படி செய்தது தீவினையின் பயன் தான் என்பது போதருகின்றது. o -