பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

415. வழக்குரை காதையிலும் நீ யார்?' என்று கேட்ட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு ஊழ்வினை செலுத்திய தனால் உன் நகரை அடைந்த கோவலன், என் காற் சிலம்பை விற்க முனைந்த செயலால் கள்வன் என்று குற்றம் சாட்டப்பெற்றுக் கொலைப்பட்டான்' என்று குறிப்பிடு கின்றாள். கட்டுரை காதையில் மதுராபதித் தெய்வத்தின் வாயிலாக ஊழ் இரண்டிடங்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது. = ஊழ்வினை யாலேயே பாண்டியன் தவறு செய்தான்; ஊழ்வினையாலேயே கோவலன் கொலையுண்டான்' என்று அத் தெய்வம் (மதுராபதித் தெய்வம்) கண்ணகியிடம் கூறுகின்றது. மேலும் முன்வினை உருக்கொண்டு வந்து தன் பயனை நுகரச் செய்யும்போது அத்தீவினையாளர்க்கு எந்தத் தவமும் பயன்படாது; அவ் வூழின் செயலைத் தடுக்கமுடியாது’ என்று மற்றோரிடத்திலும் மதுராபதித் தெய்வம் உரைக்கின்றது. வஞ்சிக் காண்டத்தின் தொடக்கத்திலேயே ஊழ் வினையின் ஆற்றல் கண்ணகி கூற்றால் வெளிப்படக் காணலாம். வேங்கைமர நிழலிலே கண்ணகியைக் கண்ட குறவர்கள் வேங்கை மர நிழலில் நிற்கும் வள்ளி போல்வர். மனம் நடுங்க, முலையிழந்து வந்து நிற்கும் நீவிர் யாவிரோ எனக் கேட்க, கண்ணகி அதற்கு * முன்னைவினையால் மதுரையும் அரசனும் அழியும்படி கணவனை யிழந்தேன்; தீவினையை யுடையேன்" என்று விடையிறுத்தாள். நீர்ப்படைக் காதையிலும் மாடல மறையோன் கூற்றால் ஊழ்வினை வற்புறுத்தப் படுகின்றது. ஊழ்வினை கானல்வரிப் பாட்டுடன் கலந்து வந்தது என்றும், அதன் தொடர்பாகவே கோவலன் கொலைப்படல், கண்ணகி நின்நாடு வரல், வடதிசை மன்னர் நின்னால் சிறைப்பட்டுப் பத்தினிக் கடவுளுக்குரிய படிமத்தை முடித்தலையிற் சுமத்தல் முதலாய நிகழ்ச்சிகள் விளைந்தன என்றும் குறிப்பிட்டான். o